இணையத்தளங்களில் சட்டவிரோதமாகப் படங்களை வெளியிடுபவர்களுடன் எங்களுக்குத் தொடர்பில்லை: லைகா விளக்கம்

திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நிறுவனங்களோடு தங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று...
இணையத்தளங்களில் சட்டவிரோதமாகப் படங்களை வெளியிடுபவர்களுடன் எங்களுக்குத் தொடர்பில்லை: லைகா விளக்கம்

தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நிறுவனங்களோடு தங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் இணையத்தளங்களுடன் லைகா தயாரிப்பு நிறுவனத்துக்குத் தொடர்புள்ளதாக இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுடைய பெயரும் அடிபட்டது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:

லைகா நிறுவனம் ஆன்லைன் பைரசியை ஊக்கப்படுத்துவதாகக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

லைகாமூவிஸ் டாட் காம், லைகாமூவி டாட் காம் ஆகிய இரண்டுமே 2014 ஜூன் மாதத்துடன் மூடப்பட்டன. இந்த இரு இணையத்தளங்களுடன் லைகா நிறுவனத்துக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை. 

லைகாமூவி டாட் காம் இணையத்தளத்தை அதற்கு முன்பு ஆரம்பித்த தமிழ் தமிழன் என்கிற பெயர் கொண்டவர் புதுப்பிக்கவில்லை. எனவே லைகா நிறுவனம், லைகாமூவி டாட் காம் என்கிற இணையத்தளத்தின் பெயரை ஜூலை 2017-ம் ஆண்டு கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் லைகாமூவிஸ் டாட் காம் இணையத்தளத்தைப் புதுப்பித்துக்கொண்டதால் எங்களால் அதைப் பெற முடியவில்லை. இப்போது லைகாமூவி டாட் காம், லைகாபுரொடக்‌ஷன்ஸ் டாட் இன்-னாக மாற்றப்பட்டுள்ளது. 

ஜூலை 5, 2017-க்கு முந்தைய லைகாமூவி டாட் காம் தொடர்புடைய செயல்களுக்கு லைகா நிறுவனம் பொறுப்பேற்காது. அதே தேதிக்குப் பிறகு லைகாமூவி டாட் காம், எவ்வித ஆன்லைன் பைரசி செயல்களிலும் ஈடுபடவில்லை. எனவே எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை. 

ஆன்லைன் பைரசியைத் தடுக்கும் செயல்களை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் படங்கள் மற்றும் இதர படங்கள் தொடர்புடைய ஆன்லைன் பைரசிக்கு எதிராகச் செயலாற்றியுள்ளோம். இதுதொடர்பாக எங்கள் மீது ஆதாரம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம்.  

எங்களிடம் விளக்கம் கேட்காமல் அப்படியொரு கட்டுரையை வெளியிட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இதே செய்தியை எங்களிடம் விளக்கம் கேட்காமல் இதர ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இது மேலும் வருத்தமடைய வைத்துள்ளது. லைகா நிறுவனத்துக்கு எதிராகப் பேசிய ஊடக நிறுவனங்கள், நபர்கள் ஆகியோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்க எடுக்க முடிவெடுத்துள்ளோம்.

ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து எங்களிடம் நேரடியாக விளக்கம் கேட்கலாம். நல்ல படைப்புகள்மீதுதான் நாங்கள்
நம்பிக்கை வைத்துள்ளோம். திரையுலகுக்கு எல்லாவிதத்திலும் நாங்கள் ஆதரவாக இருந்துள்ளோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com