கேன்ஸ் திரைப்பட திருவிழா: இத்தாலி நடிகருக்கு சிறந்த நடிகர் விருது

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில், இத்தாலி நாட்டு நடிகர் மார்செல்லோ பான்ட்}க்கு சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற இத்தாலி நடிகர் மார்செல்லோ பான்ட், சிறந்த நடிகைக்கான விருது பெற்ற  கஜகஸ்தான் நாட்டு நடிகை சமால் யெஸ்லியாமோவா.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் கடந்த 8ஆம் தேதி முதல் கேன்ஸ் திரைப்பட திருவிழா நடைபெற்றது. விழாவில் சனிக்கிழமையன்று சிறந்த நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்டோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் "டாக்மேன்' எனும் படத்தில் நடித்த இத்தாலி நடிகர் மார்செல்லோ பான்ட்}க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
"அக்யா' படத்தில் நடித்த கஜகஸ்தான் நாட்டு நடிகை சமால் யெஸ்லியாமோவாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது.
"பனிப்போர்' திரைப்படத்தை இயக்கிய போலந்து நாட்டைச் சேர்ந்த பவெல் பவ்லிகோவ்ஸ்கி}க்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. 
கடந்த 2013ஆம் ஆண்டில் "இடா' படத்தை இயக்கியதற்காக இவருக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com