கேன்ஸ் விழாவில் இந்திய திரைப்படம் "நக்காஷ்'

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமையை இந்திய திரைப்படமான "நக்காஷ்' பெற்றுள்ளது.
கேன்ஸ் விழாவில் இந்திய திரைப்படம் "நக்காஷ்'

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமையை இந்திய திரைப்படமான "நக்காஷ்' பெற்றுள்ளது.
71-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் இம்மாதம் 8-ஆம் தேதி தொடங்கி, கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்தது. அதில், இந்தியாவில் எடுக்கப்பட்டிருந்த "நக்காஷ்' என்ற ஹிந்தி மொழிப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஸாய்காம் இமாம் இயக்கியிருந்த அந்தப் படத்தில், இனாம் அல் ஹக்-ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்.
ஒரு முஸ்லிம் கைவினைக் கலைஞர் ஹிந்து கோயில்களில் சிலை வடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் தனது சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுகிறார். அதனால் அவரும், அவரது மகனும் அனுபவிக்கும் இன்னல்களை விளக்குவதாக அந்தப் படம் அமைந்துள்ளது. "நக்காஷ்' படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது குறித்து இயக்குநர் ஸாய்காம் இமாம் கூறுகையில், "இந்தியாவின் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்ததால் "நக்காஷ்' படத்தை இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தேர்வு செய்திருந்தது. இப்படத்தில் இந்தியாவை, புனித நகரமான வாராணசியின் பின்னணியில், புதிய, வித்தியாசமான கோணத்தில் காட்டியுள்ளோம்' என்றார்.
இதனிடையே, கேன்ஸ் திரைப்பட விழாவில் "நக்காஷ்' தவிர, நந்திதா தாஸ் இயக்கத்தில் நவாஸூதின் சித்திக்கி நடித்த "மான்டோ' உள்ளிட்ட இந்திய திரைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com