துப்பாக்கிச்சூடு: இயக்குநர் ஷங்கர் ட்வீட்!

இது அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்துகிறது. தூத்துக்குடியில் மரணமடைந்த மக்களின் குடும்பத்தினருக்கு...
துப்பாக்கிச்சூடு: இயக்குநர் ஷங்கர் ட்வீட்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

இது அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்துகிறது. தூத்துக்குடியில் மரணமடைந்த மக்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com