கணவரின் அன்புக் கட்டளையை ஏற்றார் அனுஷ்கா ஷர்மா! (விடியோ)

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்கள் தங்களது உடற்தகுதி மந்திரத்தை விடியோவில் பதிவு
கணவரின் அன்புக் கட்டளையை ஏற்றார் அனுஷ்கா ஷர்மா! (விடியோ)

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்கள் தங்களது உடற்தகுதி மந்திரத்தை விடியோவில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட செவ்வாய்கிழமை வலியுறுத்தினார். இந்த உடற்தகுதி பிரச்சாரத்தை அவரிடம் இருந்தே தொடங்கிய ரத்தோர் 10 புஷ் அப் (Push Up) எடுக்கும் காட்சியை பதிவு செய்து டுவிட்டரில் பகிர்ந்தார். தான் உடற்தகுதியுடன் இருப்பதற்கு பிரதமர் மோடி தான் முன்மாதிரி என்று அவர் அந்த விடியோவுடன் இணைத்து பாராட்டியிருந்தார்.

பின்னர், இந்த உடற்தகுதி சவாலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் விராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரை பங்கேற்க ரத்தோர் பரிந்துரை செய்தார். 

ரத்தோரின் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, பட் பிளாங்க் (Butt Plank) செய்வதை விடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு உடற்தகுதி சவாலை விடுப்பதாகவும் கோலி குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார்.   இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, விராட்! உடற்தகுதி சவாலுக்கான விடியோவை நான் விரைவில் பகிர்கிறேன்' என்றார்.

கணவரின் உடற்தகுதி சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா, இதே சவாலை மூன்று பேருக்கு விடுத்துள்ளார். வருண் தவான், ரத்தோர் மற்றும் தீபிகா பல்லிக்கல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து, தனது சவாலை நிறைவேற்றும்படியாக உடற்பயிற்சிகளை பதிவு செய்து இந்த ஒரு நிமிட விடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சவால்கள் இணையதளத்தில் பிரபலங்களை வைத்து முன்னெடுக்கப்படுகிறது. அனைவருக்கும் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறார் சவாலை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com