சிஎஸ்கே வெற்றி குறித்த ட்வீட்டை இயக்குநர் ஷங்கர் நீக்கியது ஏன்?

தன்னுடைய படங்களில் ஊழல், சமூக அவலங்கள் குறித்து பேசும் ஷங்கர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து எதுவும் தெரிவிக்காதது ஏன்... 
சிஎஸ்கே வெற்றி குறித்த ட்வீட்டை இயக்குநர் ஷங்கர் நீக்கியது ஏன்?

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களைக்
குவித்தார்.

சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதையடுத்து, இயக்குநர் ஷங்கர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிஎஸ்கே - தி அவெஞ்சர்ஸ், அணி முழுக்க கதாநாயகர்கள். என்ன ஓர் அருமையான போட்டி என்று சென்னையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ட்வீட் செய்தார். 

ஆனால் அன்றைய தினம்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 காவல்துறையினருக்குக் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து எதுவும் ட்வீட் செய்யாமல், சிஎஸ்கே அணியின் வெற்றியைக் கொண்டாடும் ட்வீட்டை வெளியிட்டது ஏன் எனப் பலரும் ஷங்கருக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். தன்னுடைய படங்களில் ஊழல், சமூக அவலங்கள் குறித்து பேசும் ஷங்கர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து எதுவும் தெரிவிக்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இதையடுத்து தனது கிரிக்கெட் ட்வீட்டை நீக்கினார் ஷங்கர். பிறகு, தூத்துக்குடி சம்பவம் குறித்த தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இது அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்துகிறது. தூத்துக்குடியில் மரணமடைந்த மக்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com