பிக் பாஸ் 2 டப்பிங்கில் பேசியது யார்?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற
பிக் பாஸ் 2 டப்பிங்கில் பேசியது யார்?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

இந்நிலையில் இதே நிகழ்ச்சியின் 2-ம் பாகம் வரும் ஜூன் 11 தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் என்று கூறியிருந்தார் கமல்.

தற்போது ‘நல்லவர் யார்? கெட்டவர் யார்?’ என்ற வாசகத்துடன் இன்னொரு டீஸர் வெளிவந்துள்ளது. சுற்றிலும் 60 கேமராக்கள் கண்காணித்துக் கொண்டிருக்க, 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 15 பிரபலங்கள் தயாராகி வருகின்றனர். இந்தப் பிரபலங்கள் யார் என்று பல ஊகங்கள் நிலவி வந்தாலும் இதுவரை முடிவாகத் தெரியவில்லை.

மேலும் பிக் பாஸ் 2 குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியின் டப்பிங் வேலை நேற்று (மே 24) முதல் தொடங்கி விட்டது. நடிகர் கமல்ஹாசன் டப்பிங் கொடுக்கும் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி அடுத்தடுத்து டீஸர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கமல்ஹாசன் கொடுத்துள்ள இந்த டப்பிங் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் டீஸருக்காக இருக்கலாம் என்று அவதானிக்கப்படுகிறது.

Welcome Back Boss என ரசிகர்கள் கமலை வரவேற்க தயாராகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com