திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா?

திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா? என்பதே திரு தாய் அவளே குறும்படத்தின் ஒரு லைன் கதை
திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா?

திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா? என்பதே திரு தாய் அவளே குறும்படத்தின் ஒரு லைன் கதை திருநங்கையாக தர்ம துரை படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும், அவள் நங்கை குறும்படத்தில் பிரதான வேடத்திலும் நடித்த ஜீவா சுப்ரமணியனும், கவண் படத்தில் பாவனா கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்த பிரியா ராஜ்குமாரும் இந்தக் குறும்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

குழந்தையின் அருமையெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது என்று பெற்றோரால் உதாசினப்படுத்தப்படும் ஜீவா, குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? என்று தனக்கு தெரிந்த மருத்துவரான பிரியாவிடம் சென்று விசாரிக்கிறார். சில நிமிட யோசனைக்கு பிறகு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டு வாடகை தாய் விதி முறைகளை ஜீவாவிடம் கூறுகிறார். வாடகை தாயாய் இருப்பதற்கு ஜீவா சம்மதித்தாரா? கருவை சுமந்து குழந்தையை ஈன்றெடுத்தாரா? என்பதே கதை.

திரைக்கதை, இயக்கம், நடிப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அருமை. பின்னணி இசை நன்றாக உள்ளது. பின்னணி இசையில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தக் கதையில் ஜீவாவும், பிரியா ராஜ்குமாரும் நடிக்க சம்மதித்து சிறப்பான நடிப்பையும் வழங்கியிருப்பது இதுபோன்ற வளரும் இயக்குநர்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும்.

படத்தை இயக்கிய பிரவீன் கூறுகையில், 'இந்தக் கதையை இயக்குவது சற்று சவாலாக இருந்தது. எனது நண்பர்கள் மற்றும் படக் குழுவினரின் முயற்சியால் சாத்தியமானது. மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற திருநங்கைகள் குறும்பட விழாவில் இந்தப் படம் தேர்வாகி திரையிடப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை ஜீவா பெற்றார்.

மேலும் சில பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும், பல குறும்பட விழாக்களுக்கு படத்தை அனுப்ப இருக்கிறேன்' என்றார். ஜீவா கூறுகையி்ல், 'இதுவரை ஏற்காத கதாபாத்திரம் இது. பிரவீன் கதையைக் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக் கொண்டேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com