இணையத்தில் வைரலாகும் 2.0 மேக்கிங் விடியோ! 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் 2.0 மேக்கிங் விடியோ! 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  நவம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படம் வெளியீட்டில் ஏன் தாமதம் என்று எல்லோரும் கேள்வி எழுப்பினார்கள். லேட் ஆனாலும் கரெக்டாக வரவேண்டும். வந்தால் நிச்சயமாக அடிக்கவேண்டும். நான் படத்தைச் சொன்னேன். மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது சூப்பர் ஹிட் படம் என்று. தமிழ்த் திரையுலகை இந்தியத் திரையுலகம் வரை கொண்டு சென்ற ஷங்கர் தற்போது இந்தியத் திரையுலகைச் சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்றுள்ளார் என்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ரஜினி பேசினார்.

2.0 படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் 2.0 படம் உருவானது எப்படி? என்ற மேக்கிங் விடியோவை படக்குழுவினர் பல லட்சம் செலவு செய்து உருவாக்கியிருந்தனர். ஆனால் அந்த விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி விட்டது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விடியோவை யார் வெளியிட்டார்கள், இது எப்படி வெளியில் லீக் ஆகியது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விசாரணை நடத்தி வருகின்றது. இது தமிழ் ராக்கர்ஸ் செய்த வேலையா என்றும் சந்தேகம் வலுத்துள்ளது. காரணம் பெரிய பட்ஜெட் படங்களை இணையதளத்தில் சவாலுடன் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இந்த மேக்கிங் விடியோவையையும் பாதுகாப்பை மீறி இணையதளத்தில் வெளியிட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. படக்குழுவினர் இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com