முதல் மனைவியின் குழந்தைகளை செட்டில் செய்த அப்பா என்னை நடுத்தெருவுக்கு விரட்டுவது தவறு: வனிதா விஜயகுமார்!

அப்பா, அம்மாவை நிஜமாகவே நேசித்திருந்தார் என்றால் அதே நேசம் என் அம்மாவின் வயிற்றில் பிறந்த  குழந்தைகளான எங்களின் மீதும் இருந்திருக்கும். ஆனால், நிஜம் அப்படி இல்லை என்று தெரிந்த போது, அது மனதை மிகவும் வ
முதல் மனைவியின் குழந்தைகளை செட்டில் செய்த அப்பா என்னை நடுத்தெருவுக்கு விரட்டுவது தவறு: வனிதா விஜயகுமார்!

‘என் அப்பா விஜயகுமாரை விட அம்மா மஞ்சுளாவின் சம்பாத்தியம் தான் அதிகம். என் அப்பா விஜயகுமார் அம்மா மஞ்சுளாவைத் திருமணம் செய்வதற்கு முன்பு அப்படி ஒன்றும் வெற்றிகரமான நடிகராகத் திகழ்ந்தவரில்லை. அவர் பிரதான நாயகனாக நடித்த எந்தப் படமும் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் இரண்டாம் கதாநாயகனில் இருந்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு இறங்கி நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய சினிமா எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தியவர் என்  அம்மா  மஞ்சுளா தான். அப்பாவை விட அம்மாவின் சொத்துக்களே அதிகம். அந்த சொத்துக்களை அம்மாவிடம் இருந்து தன் பெயருக்கும் முதல் மனைவியும், அருண் விஜயின் தாயாருமான அம்மையாரின் பெயருக்கும் மாற்றுவதற்காக அம்மாவை எப்போதும் குடிபோதையில் வைத்திருந்தார் என் அப்பா விஜயகுமார். அம்மாவின் குடிப்பழக்கத்தை திருத்துவதை விட்டு விட்டு அவரை மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியதோடு கடைசியில் அவரை குடிகாரி என்று மட்டம் தட்டிப் பேசிப் பேசியே அம்மாவின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியவர் அப்பா விஜயகுமார்.

அம்மா உயிருடன் இருந்தவரை என் அப்பாவை மிகவும் நேசித்தார், அவரையே எப்போதும் மிகவும் நம்பினார். அம்மாவின் நேசம் மட்டுமே உண்மையானது. அப்பாவின் நேசம் போலித்தனமானது என்பதை இப்போது நான் உணர்கிறேன். ஏனென்றால் அப்பா, அம்மாவை நிஜமாகவே நேசித்திருந்தார் என்றால் அதே நேசம் என் அம்மாவின் வயிற்றில் பிறந்த  குழந்தைகளான எங்களின் மீதும் இருந்திருக்கும். ஆனால், நிஜம் அப்படி இல்லை என்று தெரிந்த போது, அது மனதை மிகவும் வருந்தச் செய்வதாக இருக்கிறது. 

இப்போது என் அம்மா மஞ்சுளா உயிரோடு இருந்திருந்தாலும் என் அப்பாவின் மீதான காதலுக்காக அவர் இன்றும் அவர் சொல்வதையே நம்புவார் என்றாலும் கூட என்னை வீட்டை விட்டு தெருவில் விரட்டுவது போன்ற கேவலமான செயல்களை நிச்சயம் தடுத்தி நிறுத்தியிருப்பார். அம்மாவின் இழப்பை அவர் இறந்த பிறகான காலங்களில் இப்போது தான் அதிகமும் உணர்ந்து வருந்துகிறேன். என் அம்மா இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்திருக்காது. ஒரு தந்தை, தன் மகளை இவ்வளவு கீழ்த்தரமாக பொது வெளியில் கேவலப்படுத்தி அவளை நடுத்தெருவில் நிறுத்துவதெல்லாம் மிக மோசமான செயல். வீட்டுப் பிரச்னையை பொதுவெளியில் இப்படி பூதாகரமாக வெடிக்குமெனில் அந்த நிலை வரை பிரச்னையை வளர விட்ட அப்பா, மகள் இருவருமே செத்து விடலாம். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டியதில்லை. அந்த அளவுக்கு என் அப்பா மோசமானதொரு சூழ்நிலையை தற்போது உருவாக்கி வைத்திருக்கிறார்.

- தனக்கான நியாயம் கிடைக்கும் வரை தன் உரிமைகளுக்காக போராடத் தயங்க மாட்டேன் என்கிற உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் இவ்வாறாக ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்து வருகிறார் நடிகையும், இயக்குனருமான வனிதா விஜயகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com