நாங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு லீனா மணிமேகலை பதில் சொல்லியாக வேண்டும்: சுசி கணேசனின் மனைவி அறிக்கை!

என்னுடைய வயதான பெற்றோரும் எங்கள் குழந்தைகளும் அனுபவித்த வேதனைகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்..
நாங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு லீனா மணிமேகலை பதில் சொல்லியாக வேண்டும்: சுசி கணேசனின் மனைவி அறிக்கை!

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து இருவரும் பேட்டியளித்தார்கள். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன். 

இந்நிலையில் சுசி கணேசனின் மனைவி மஞ்சரி, கணவருக்கு ஆதரவாக ட்விட்டரில் எழுதியுள்ளதாவது: நான் என் கணவரின் பக்கம் நிற்கிறேன். லீனா மணிமேகலையின் நன்குத் திட்டமிட்ட, அடிப்படை ஆதாரமற்ற கற்பனையான அவதூறுகளை மறுக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து 15 வருடங்களாகிறது. கொள்கைகளும் மதிப்பீடுகளும் கொண்ட ஒழுக்கமுள்ள நபர் அவர். நல்ல கணவர் மற்றும் அன்பான தந்தை. மீ டூ இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் லீனா போன்றவர்கள் அதைச் சரியான ஆதாரங்கள் இன்றி தவறாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டம். என் கணவர் மீது அவதூறு பரப்பும் லீனா மணிமேகலை மீது  ஒரு மனைவியாகவும் தாயாகவும் மகளாகவும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளேன். என்னுடைய வயதான பெற்றோரும் எங்கள் குழந்தைகளும் அனுபவித்த வேதனைகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். உண்மை நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com