மீடூ குறித்து நடிகை விஜி சந்திரசேகர் ‘நச்’ சென்று சொன்ன நாலு நல்ல வார்த்தை!

மீடூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எப்போதோ தங்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகளை பெண்கள் இன்று வரை மறக்க முடியாமல் தவித்து அதற்கொரு வாய்ப்புக் கிடைத்தபின் அதைப் பற்றிப் பகிர்வதற்கு மிகப்பெரிய தைரியம் 
மீடூ குறித்து நடிகை விஜி சந்திரசேகர் ‘நச்’ சென்று சொன்ன நாலு நல்ல வார்த்தை!

சினிமா இண்டஸ்ட்ரியில் என் காலத்தில் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் சான்ஸ் எடுத்துக் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சான்ஸை அளிக்காமல் இருக்க வேண்டியது பெண்களுடைய தைரியம் சார்ந்த விஷயம். என் மகளை நான் சினிமாவில் அறிமுகப்படுத்திய போது... என்னிடம் ஒரு நேர்காணலின் போது, மேடம் இது பாதுகாப்பான இண்டஸ்ட்ரியா, மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறீர்களே என்று கேட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னேன். இன்று எந்த இண்டஸ்ட்ரியை எடுத்துக் கொண்டாலும் அங்கே இரவு ஷிஃப்ட்களில் உங்கள் மகளுடன் துணைக்கு உங்களால் செல்ல முடியாது. ஆனால், சினிமா இண்டஸ்ட்ரியில் அப்படியல்ல... நீங்கள் துணைக்குச் செல்லலாம். அதனால் சினிமா எப்போதுமே பாதுகாப்பான இண்டஸ்ட்ரி தான் என்று அந்த நேர்காணலில் நான் சொன்னேன்.

மீடூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எப்போதோ தங்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகளை பெண்கள் இன்று வரை மறக்க முடியாமல் தவித்து அதற்கொரு வாய்ப்புக் கிடைத்தபின் அதைப் பற்றிப் பகிர்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை நாம் மதிக்க வேண்டும். இப்போது பல பிரபலமான மனிதர்கள் மீது மீடூ குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றித் தெரியவில்லை. உண்மையா, பொய்யா என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். ஒருவேளை அது உண்மையாக இருந்தால், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போது தான் இழந்த அவர்களது நற்பெயர் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை விவகாரங்களைப் பொருத்தவரை, குற்றம் நடந்த அந்த நிமிடத்திலேயே குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் தண்டிக்க்க வேண்டும். மீண்டும் அத்தகைய குற்றத்தை மற்றொரு பெண்ணுக்குச் செய்யும் தைரியம் அவர்களுக்கு வரக்கூடாது. அந்த அளவுக்கு பெண்கள் அளிக்கும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் தண்டனை கடுமையாக இருப்பதில்லையே... கடுமையான தண்டனைகள் இருந்தால் தான் குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்கும்.

என் காலத்தில் குட் டச், பேட் டச் இருக்கவில்லை. இன்றைக்கு அதற்கான தேவை வந்திருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்த விளக்கம் எத்தனை தேவையோ... அதே போல இன்றைய பெண்களுக்கு மீடூ பகிரலும் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com