மீ டு விவகாரம்: பிரபல நடிகர் அர்ஜுனுக்கு எதிராக கன்னட நடிகை குற்றச்சாட்டு

பிரபல நடிகர் அர்ஜுனுக்கு எதிராக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
மீ டு விவகாரம்: பிரபல நடிகர் அர்ஜுனுக்கு எதிராக கன்னட நடிகை குற்றச்சாட்டு

பிரபல நடிகர் அர்ஜுனுக்கு எதிராக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
 பல்வேறு கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன், தனது முகநூல் பக்கத்தில் அர்ஜுனுக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
 நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படங்களை கண்டு வளர்ந்தவள் நான். அவருடன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பின்போது என்னிடம் அர்ஜுன் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அந்தப் படத்தின் நாயகனான அர்ஜுனுக்கு மனைவியின் கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்போது அவர் தமது கைகளால் என் அனுமதியின்றி, முதுகை வருடினார். மேலும், திரைப்பட இயக்குநரை நோக்கி, கட்டியணைப்பது போன்ற காட்சிகளை வைக்கும்படி யோசனை தெரிவித்தார். அவரது இந்த செயல், என்னை வெறுப்படைய செய்தது. இருப்பினும், திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைதியாக இருந்து விட்டேன். படப்பிடிப்பு முடிந்தபிறகு, தம்மை வந்து சந்திக்கும்படியும் அழைப்பு விடுத்தார். அதை நான் பொருட்படுத்தவில்லை என்று அந்தப் பதிவில் ஸ்ருதி ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார்.
 இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com