இது பட்டாசோ பொங்கலோ அல்ல, படம்: என்ஜிகே வெளியீடு குறித்து சூர்யா

என் ரசிகர்களின் வேதனையை நான் உணர்கிறேன். சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. படத்தை நாங்கள் மிகச்சிறப்பாக...
இது பட்டாசோ பொங்கலோ அல்ல, படம்: என்ஜிகே வெளியீடு குறித்து சூர்யா

என்ஜிகே படம் தாமதமாக வெளிவந்தாலும் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்தப் படம் தீபாவளியன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் தீபாவளியன்று வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

சமீபத்தில் இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு சிறிது நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் என்ஜிகே படம் தீபாவளிக்குப் பிறகுதான் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் எதிர்பார்த்த விஜய் vs சூர்யா படங்களின் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது விழா ஒன்றில் பங்கேற்ற சூர்யா, என்ஜிகே படம் பற்றிக் கூறியதாவது:

என்ஜிகே படம் தீபாவளிக்கு வரவில்லை. என் ரசிகர்களின் வேதனையை நான் உணர்கிறேன். சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. படத்தை நாங்கள் மிகச்சிறப்பாக அதை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர், தயாரிப்பாளர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நான் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக இருப்பேன். இந்தத் தாமதத்தை நல்ல விஷயமாகவே கருதுகிறேன். நம்பிக்கையுடன் உள்ளேன். பாலா அண்ணன் சொன்னதுபோல, தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வருவதற்கு இது பட்டாடோ பொங்கலோ அல்ல, படம். என்னுடன் திரையுலகில் நுழைந்தவர்கள் இன்று இங்கு இல்லை. எங்கோ அவர்கள் தொலைந்துவிட்டார்கள். ரசிகர்களின் ரசனையை அறிந்து படம் பண்ணுவது முக்கியம். தமிழ்நாட்டின் 8 கோடி மக்கள் தொகையில் 50 முதல் 80 லட்சம் பேர் ஒரு வெற்றிப் படத்தைத் திரையரங்கில் பார்க்கிறார்கள். என்னுடைய படங்கள் இன்றைக்கும் நன்றாகப் போகின்றன. திரையுலகப் பயணத்தில் என்னுடன் இணைந்து வருபவர்களுக்கு என் நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com