"அரசன்' பட விவகாரம்:  சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

"அரசன்' பட விவகாரம்:  சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

"அரசன்' என்ற திரைப்படத்தில் நடிக்க முன்பணமாகப் பெற்ற ரூ. 50 லட்சத்துக்கு  உத்தரவாதம் அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நேரிடும்  என  நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 


சென்னை: "அரசன்' என்ற திரைப்படத்தில் நடிக்க முன்பணமாகப் பெற்ற ரூ. 50 லட்சத்துக்கு  உத்தரவாதம் அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நேரிடும்  என  நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிலம்பரசனை வைத்து "அரசன்' என்ற தலைப்பில்  படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்தப் படத்துக்காக  சிலம்பரசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு,  முன் பணமாக ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. 
ஆனால், அந்தப் படத்தில் சிலம்பரசன்  நடிக்காத காரணத்தால் முன் பணமாக கொடுத்த தொகையைத் திரும்ப தரக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது சிலம்பரசன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதாவது: "படத் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில்  படப்பிடிப்பு பணிகளைத் தொடங்கவில்லை. இதனால் நடிகர் சிலம்பரசனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது' என வாதிட்டார்.
ஜப்தி செய்யப்படும்:  இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்து நீதிபதி கோவிந்தராஜ் பிறப்பித்த உத்தரவு:
படப்பிடிப்பு பணிகள் தொடங்காததால் இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிலம்பரசன் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாகப் பெற்ற ரூ.50 லட்சத்துக்கு நடிகர் சிலம்பரசன் வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும். வங்கி உத்தரவாதத்தை  4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறும் நிலையில், நடிகர் சிலம்பரசனுக்குச் சொந்தமான கார், செல்லிடப்பேசி, ஃபிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை ஜப்தி செய்ய நேரிடும்' என எச்சரிக்கை விடுத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com