‘டேனி உன்னைப் பார்க்க ஆக்டர் மாதிரி இல்லடா ஆக்சுவலா இருக்கற மாதிரி தான் இருக்கு’: டேனியல் ஆர்மி!

பிக்பாஸுக்கு முன்பு தான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தும், பிக்பாஸ் மூலமாகத்தான் தான் ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டியதாக இருக்கிறது. அது தன்னுடைய நேரம்! வேறென்ன செய்வது
‘டேனி உன்னைப் பார்க்க ஆக்டர் மாதிரி இல்லடா ஆக்சுவலா இருக்கற மாதிரி தான் இருக்கு’: டேனியல் ஆர்மி!

கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் டேனியல் ஆனி போப் நேற்று யூ டியூப் நேரலையில் தோன்றி ரசிகர்களிடம் தன் மனதில் இருப்பதை பகிர்ந்து கொண்டார். பிக்பாஸில் இருந்து தான் வெளியேறியதற்கு காரணம் பாலிடிக்ஸ் என்று ரசிகர்களில் பலர் கருதினாலும் உண்மையான காரணம், தன் அம்மாவும், குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து தன்னைப் பார்த்து விட்டுச் சென்றதில் இருந்து தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை. அம்மா நினைவாகவே இருந்ததால் தன்னைத்தானே நாமினேட் செய்து கொண்டு நான் வெளியேறி விட்டேனே தவிர பிக்பாஸ் பாலிடிக்ஸ் என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார். அது மட்டுமல்ல, பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு தன் காதலியைத் திருமணம் செய்து கொண்டது முன்னதாக வாக்களித்திருந்ததால் என்பதால் தன்னால் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என்றும்... கூடியவிரைவில் திருமண வரவேற்பு விழா வைக்கவிருப்பதால் அதற்கு ரசிகர்கள் அனைவரையும் அழைக்கவிருப்பதாகவும், அனைவரும் கண்டிப்பாகத் தன் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் டேனியல் கேட்டுக் கொண்டார்.

மகத்துடனான சண்டைக்குப் பிறகு தனக்கு பிக்பாஸ் டாஸ்குகளில் விளையாட ஆர்வம் குறைந்து விட்டதும் தான் வெளியேறியதற்கான காரணங்களில் ஒன்றாக் டேனியல் தெரிவித்தார்.

பிக்பாஸில் வென்றால் டைட்டில் வின்னர் என்ற பட்டம் கிடைக்கும். 50 லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும். ஆனால், அந்த 50 லட்ச ரூபாய் எல்லாம் தனக்குத் தேவையே இல்லை. 50 லட்சம் ரசிகர்களின் அன்பு தான் தனக்கு அதை விடப் பெரிதாகத் தோன்றுகிறது என்றும் டேனியல் தெரிவித்தார். பிக்பாஸுக்கு முன்பு தான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தும், பிக்பாஸ் மூலமாகத்தான் தான் ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டியதாக இருக்கிறது. அது தன்னுடைய நேரம்! வேறென்ன செய்வது என்று மெலிதாகச் சலித்துக் கொண்ட டேனி, தன்னைப் பற்றி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஃபேக் என்று சொன்னாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு வேளாங்கன்னியில் தன்னைச் சந்தித்த ரசிகர்களும், நண்பர்களும், ‘டேனி உன்னைப் பார்க்க ஆக்டர் மாதிரி இல்லடா ஆக்சுவலா இருக்கற மாதிரி தான் இருக்கு’ என்று சொல்வதைக் கேட்கும் போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com