இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியீடு!

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று தமிழ்ப் படங்களாவது வெளியாகிற சூழலில் இந்த வாரம்...
இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியீடு!

இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன.

செப்டம்பர் 21 அன்று ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாமி 2 (சாமி ஸ்கொயர்), ராஜா ரங்குஸ்கி, ஏகாந்தம், மேடை என நான்குப் படங்கள் வெளிவருகின்றன. 

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.

மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் தரணிதரன் இயக்கியுள்ள படம் - ராஜா ரங்குஸ்கி. இசை - யுவன் ஷங்கர் ராஜா. 

இவை தவிர ஏகாந்தம், மேடை ஆகிய மேலும் இரு படங்கள் என இந்த வாரம் 4 தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றன.

இந்த நான்குப் படங்களில் சாமி 2 படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவருகிறது. சாமி படத்தின் வெற்றிக்கு அதன் இரண்டாம் பாகம் ஈடுகொடுக்குமா என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com