சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

கொம்பு வச்ச சிங்கம் என்கிற படத்தின் மூலம் சசிகுமாரும் பிரபாகரனும் மீண்டும் இணைகிறார்கள்...
சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

2012-ம் வருடம் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் என்கிற படத்தில் நடித்தார் சசிகுமார். நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். இந்நிலையில் கொம்பு வச்ச சிங்கம் என்கிற படத்தின் மூலம் சசிகுமாரும் பிரபாகரனும் மீண்டும் இணைகிறார்கள். 

பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ், யோகி பாபு, சூரி போன்றோரும் இதில் நடிக்கிறார்கள். சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசிவருகிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

சசிகுமார், எஸ்.ஆர். பிரபாகரன் ஆகிய இருவருக்குமே சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு அந்தளவுக்குப் பாராட்டுகளும் வெற்றிகளும் கிடைக்கவில்லை. குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையதேவா, கொடிவீரன், அசுரவதம் ஆகிய படங்களில் நடித்த சசிகுமாருக்கு ஓரிரு படங்களே நல்ல பெயரைத் தேடித்தந்தன. சுந்தரபாண்டியனுக்குப் பிறகு இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கினார் பிரபாகரன். இரண்டுமே அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதையடுத்து சசிகுமாரும் பிரபாகரனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com