தி அயர்ன் லேடி: ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார்? நித்யா மேனனா வரலட்சுமியா?

தி அயர்ன் லேடி படத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை...
தி அயர்ன் லேடி: ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார்? நித்யா மேனனா வரலட்சுமியா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தி அயர்ன் லேடி (The Iron Lady) என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா ஜெயலலிதா பிறந்தநாளன்று (பிப்ரவரி 24) நடைபெறவுள்ளது. அன்றைய தினம், ஜெயலலிதா வேடத்தில் நடிப்பவர் யார் என்கிற தகவலை வெளியிடவுள்ளதாக இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். எனினும் இப்படம் பற்றிய தகவலை ட்வீட் செய்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், அந்த ட்வீட்டில் நடிகை வரலட்சுமியை டேக் செய்திருந்தார். இதனால் ஜெயலலிதா வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியானது. 

இதுகுறித்து ட்விட்டரில் வரலட்சுமி கூறியதாவது: தி அயர்ன் லேடி படத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அப்படி முடிவு எடுக்கப்படும்போது அத்தகவல் முதல் ஆளாக நான் வெளியிடுவேன் என்று கூறினார். 

ஆனால் இப்படத்தில் நடிக்க நித்யா மேனன் சம்மதித்துள்ளதாக பிரியதர்ஷினி கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தப் படத்தின் பல்வேறு பாத்திரங்கள் நடிக்க பல நடிகரும் தயங்குகிறார்கள். ஆனால் நித்யா மேனன் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். எனவே பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பவர் நித்யா மேனன் தான் என்பது உறுதியாகியுள்ளது. பிரியதர்ஷினி இயக்கி வரும் முதல் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தான் படமாக்க உள்ளதாக இயக்குநர் ஏ.எல். விஜய் அறிவித்தார். இயக்குநர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்க முடிவெடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com