கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்! இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா!

டால்பினுடன் தொட்டு விளையாடி முத்தம் கொடுக்கும் படங்களை "கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்'
கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்! இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா!

டால்பினுடன் தொட்டு விளையாடி முத்தம் கொடுக்கும் படங்களை 'கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்' என்று தலைப்பிட்டு தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் டால்பினுடன் த்ரிஷா இருக்கும் படங்கள் பலத்த விமர்சனங்களுக்கு இலக்காகி சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில், சானல்களில் த்ரிஷா இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் த்ரிஷா துபாய் சென்றிருந்தார். அங்கே, நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் டால்பின் வசிக்கும் குளத்தில் குதித்து டால்பினுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். அதை படம் பிடித்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, த்ரிஷா பரபரப்பு செய்தியாகிவிட்டார்.

டால்பின் - த்ரிஷா படங்களை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். 'இது டால்பினைக் கொடுமைப்படுத்தும் செயல். இத்தனைக்கும் த்ரிஷா விலங்குகள் கொடுமைப்படுத்துவதை எதிர்க்கும் அமைப்பின் தூதுவர்களில் ஒருவர். அவர் இப்படி நடந்து கொள்ளலாமா? டால்பின் நுட்பமான நுண்ணறிவுள்ள ஜீவி. கடலில் சுதந்திரமாகத் திரியும் டால்பினை செயற்கைக் குளத்தில் போட்டு வளர்ப்பதே கொடுமைப்படுத்துவதுதான். மனிதர்கள் விளையாட டால்பின் பொம்மை அல்ல. டால்பின்களை பல சர்க்கஸ் வேலைகள் செய்யப் பழக்க பல கொடிய முறைகளைக் கையாளுகிறார்கள். மனிதர்களுக்குப் பயந்து கொண்டுதான் டால்பின்கள் வித்தைகளை செய்கின்றன. வித்தைகளை டால்பின்கள் விரும்பிச் செய்வதில்லை.

செயற்கைக் குளத்தின் தண்ணீர் கெட்டுவிடாமல் இருக்க குளோரின், காப்பர் சல்பேட் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அந்தத் தண்ணீரில் வசிக்கும் டால்பின்களின் தோல் தானே உரிய ஆரம்பிக்கிறது. கண்களின் பார்வையும் பறி போய் விடுகிறது. பிரபலங்கள் இப்படி விலங்குகளுடன் விளையாடுவதை படம் எடுத்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது. அதை பார்த்து மற்றவர்களும் அப்படி செய்ய விரும்புவார்கள். அதனால், கஷ்டப்படப் போவது விலங்குகள் மட்டுமே’ என்று விலங்கு நல ஆர்வலர்கள் விமர்சித்துத் தள்ளியுள்ளார்கள்.

த்ரிஷா 2015-இல் டால்பினுக்கு முத்தம் கொடுப்பதாக படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போது இதுமாதிரி விமர்சனங்கள் ஏதும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 - பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com