சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்த அமிதாப் பச்சனின் பதில்! 

திரையுலகில் ஒரு நடிகைக்கு நேர்ந்த கொடூரத்தை எதிர்க்காமல் அதிலிருந்து நழுவும் விதத்தில் பதில் அளித்ததற்கு...
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்த அமிதாப் பச்சனின் பதில்! 

ஜார்க்கண்டைச் சேர்ந்த பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, 2005 முதல் பாலிவுட்டில் நடித்துவருகிறார். 2010-ல் விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்கிற படத்தில் நடித்தார்.

2009-ல் வெளியான ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் தன்னிடம் ஒரு பிரபல நடிகர் மோசமாக நடந்துகொண்டதாகப் பேட்டியளித்தார் தனுஸ்ரீ தத்தா. இந்நிலையில் அந்த நடிகரின் பெயரைத் தற்போது கூறியுள்ளார். ஜூம் டிவிக்கு அளித்த பேட்டியில் தனுஸ்ரீ தத்தா கூறியதாவது: பெண்களிடம் நானா படேகர் மோசமாக நடந்துகொள்வது பற்றி பாலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் அது குறித்துப் பேசுவதில்லை. பெண்களிடம் அவர் மரியாதைக்குறைவாக நடந்துகொள்வது பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் நடிகைகளை அடித்துள்ளார், அவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். பெண்களிடம் அவர் மோசமாகவே நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் குறித்து யாரும் எழுதியதில்லை. கடந்த எட்டு வருடங்களில் நானா படேகருடன் இணைந்து அக்‌ஷய் குமார் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினி கூட அவருடன் நடித்துள்ளார். பெரிய நடிகர்கள், அவரைப் போன்ற குற்றவாளியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தால், மீ 2 போன்ற விழிப்புணர்வுப் போராட்டங்கள் இங்கு நடைபெறாது. திரைத்துறையில் நடிகர்கள் பற்றிய நிறைய கதைகளை நீங்கள் கேட்பீர்கள். ஆனால் அவர்கள் மக்கள் தொடர்புப் பணிகளில் அதைச் சரிகட்டி விடுவார்கள். சில விவசாயிகளுக்கு நிதியுதவி செய்துவிடுவார்கள். இவை எல்லாம் விளம்பரங்களுக்காகச் செய்பவைதான் என்று காட்டமாக விமரிசனம் செய்துள்ளார். 

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கிறார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்துள்ளார்கள். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து அமிதாப் பச்சனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமிதாப், நான் தனுஸ்ரீ தத்தாவும் அல்லர், நானா படேகரும் அல்லர், இதில் நான் எப்படி கருத்தைக் கூறமுடியும் என்று பதில் அளித்தார். 

அவருடைய இந்தப் பதில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. திரையுலகில் ஒரு நடிகைக்கு நேர்ந்த கொடூரத்தை எதிர்க்காமல் அதிலிருந்து நழுவும் விதத்தில் பதில் அளித்ததற்குப் பலரும் அமிதாப் பச்சனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com