மோகன்லாலுடன் ஒரு செல்பி!

மலையாளத்தில் கடந்த வாரம் வெளியாகியுள்ள மோகன்லாலின் "புலி முருகன்' மிகப் பெரும் வெற்றியை தக்க வைத்துள்ளது.
மோகன்லாலுடன் ஒரு செல்பி!

மலையாளத்தில் கடந்த வாரம் வெளியாகியுள்ள மோகன்லாலின் "புலி முருகன்' மிகப் பெரும் வெற்றியை தக்க வைத்துள்ளது. தனது ரீ என்ட்ரிக்காக, சுமார் 20 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்து காத்திருந்த நமீதாவுக்கு, இது சிறப்பான தொடக்கமாக அமைந்திருக்கிறது. தனது ரீ என்ட்ரி நினைத்தது போல் அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசியதிலிருந்து....

"புலி முருகன்' வாய்ப்பு எப்படி...?

மீனுக்காக கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தேன். அப்போதுதான் வந்தது புலி முருகன் வாய்ப்பு. என் கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. பணக்கார பெண். மோகன்லாலின் குணத்தைப் பார்த்து அவர் மீது காதல். இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கமே வெற்றி என்பதில் மகிழ்ச்சி.

மோகன்லாலுடன் நடித்த அனுபவம்?

அவர் அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. படப்பிடிப்பில் அவருடன் நான் எடுத்துக் கொண்ட செல்பி என் பொக்கிஷம்.

அரசியல்.... சினிமா... இரண்டிலும் பயணப்படுவதுதான் திட்டமா...?

இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்து கொண்டும் இருக்கிறேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை. அடுத்து தமிழில் "பொட்டு' படத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சில வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com