சத்யராஜ் ஜோடியானார் அமலாபால்

இயக்குநர் விஜய்யிடமிருந்து பிரிந்த அமலாபால், தனுஷின் ஜோடியாக "வட சென்னை' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
சத்யராஜ் ஜோடியானார் அமலாபால்

இயக்குநர் விஜய்யிடமிருந்து பிரிந்த அமலாபால், தனுஷின் ஜோடியாக "வட சென்னை' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து சத்யராஜ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாகன் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு "முருகவேல்' என பெயரிடப்பட்டுள்ளது. சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மற்றொரு கதாநாயகி ரம்யா நம்பீசன். கஞ்சா கருப்பு, பப்லு  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ் தொழிலதிபராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட புதிதாக அரசு ஏற்படுத்திய சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அமலாபால் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com