கருப்பு ராஜா வெள்ளை ராஜா!

நீண்ட இடைவெளிக்குப் பின் பிரபுதேவா தமிழில் இயக்கவுள்ள படத்துக்கு "கருப்பு ராஜா வெள்ளை ராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கருப்பு ராஜா வெள்ளை ராஜா!

நீண்ட இடைவெளிக்குப் பின் பிரபுதேவா தமிழில் இயக்கவுள்ள படத்துக்கு "கருப்பு ராஜா வெள்ளை ராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் - கார்த்தி இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் "வனமகன்' படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றொரு கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான வெடி படத்துக்குப் பிறகு தமிழில் படங்கள் இயக்காமல் இருந்தார் பிரபுதேவா. ஹிந்தியில் "ரவுடி ரத்தோர்', "ரா. ராஜ்குமார்', "சிங் இஸ் ப்ளிங்' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். 
தற்போது மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளார் பிரபுதேவா. விஷால் - கார்த்தி இருவரும் நாயகர்களாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இப்படத்தின் தொடக்க விழா கடந்த 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. 
ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com