மனித உணர்வுகளைப் பேசும் தொண்டன்!

"அப்பா' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடிக்கும் படம் "தொண்டன்.'
மனித உணர்வுகளைப் பேசும் தொண்டன்!

"அப்பா' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடிக்கும் படம் "தொண்டன்.' சுனைனா, சூரி, விக்ராந்த், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். படம் குறித்து சமுத்திரக்கனியிடம் பேசும் போது... ""தொண்டன்' என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, இது அரசியல் படமா? என்று கேட்கிறார்கள். இதில் அரசியல் துளியும் கிடையாது. பிறருக்கு உதவி செய்கிற யாவருமே தொண்டன் என்பதை களமாக கொண்டு, இக்கதையை எழுதியுள்ளேன். எனக்கு நாளிதழ் செய்திகளை ஒரு வரி கூட விடாமல் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது கரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு ஒரு கல்லூரியில் உள்ளே நுழைந்த ஒருவன் 60 மாணவ, மாணவர்கள் நிரம்பிய வகுப்பறையில் புகுந்து ஒரு மாணவியின் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறான். அதை ஒருவர் கூடத் தடுக்கவில்லை. அப்படி ஒருவர் துணிச்சலாகத் தடுத்து இருந்தால் கூட அந்த மாணவி இன்று உயிருடன் இருந்து இருப்பார். அந்தச் சம்பவத்தை இதில் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறேன். மற்றபடி இது நிஜமும், கற்பனையும் கலந்து மனித உணர்வுகளைப் பேசக்கூடிய படமாக இருக்கும்'' என்கிறார் சமுத்திரக்கனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com