சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 88-ஆவது படம் மொட்ட சிவா கெட்ட சிவா

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி  பெற்ற படம் "பட்டாஸ்.' கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 88-ஆவது படம் மொட்ட சிவா கெட்ட சிவா

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி  பெற்ற படம் "பட்டாஸ்.' கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படம் தற்போது "மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, சத்யராஜ், லட்சுமிராய், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மயில்சாமி, "மகாநதி' சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஜீவா நடிப்பில் வெளிவந்த "சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இப்படத்தை இயக்கிவுள்ளார். படத்தின் உருவாக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து அவரிடம் பேசுகையில்... "காஞ்சனா' படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் வெற்றிக்குப் பின் லாரன்ஸ் இரண்டு படங்களை இயக்கி நடிப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் தெலுங்கில் வெளிவந்த "பட்டாஸ்' படத்தைப் பார்த்த லாரன்ஸ், அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். படத்தை இயக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த இக்கதையில், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அந்தளவுக்கு இந்த கதையின் கமர்ஷியல் வீச்சு இருக்கும். லாரன்ஸுக்கு தொடர்ந்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்து இருந்து வந்ததால் அவர் நடிப்பது இப்படத்துக்கு பொருத்தமாக இருந்தது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 88-ஆவது படமாக இது உருவாகியுள்ளது. அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய விதமாக இப்படம் உருவாகியுள்ளது'' என்றார் சாய்ரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com