புது விதமாக சிருஷ்டி!

சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிக்கும் படம் "முப்பரிமாணம்.' இயக்குநர் பாலாவின் உதவியாளர் அதிரூபன் இயக்குகிறார்.
புது விதமாக சிருஷ்டி!

சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிக்கும் படம் "முப்பரிமாணம்.' இயக்குநர் பாலாவின் உதவியாளர் அதிரூபன் இயக்குகிறார். பொள்ளாச்சி வி.விசு, கோல்டு வி.குமார் தயாரிப்பு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. இதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறியது... "ரஜினி சார்தான் இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டார். முன்னதாக இதன் டிரெய்லர் "கபாலி' படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. பாடல் காட்சி ஒன்றில் 29 நட்சத்திரங்கள் நடித்துக் கொடுத்தனர். நான் நடித்த படங்களில் இது புது மாதிரியாக இருக்கும். வழக்கமான சினிமா என்பதைத் தாண்டி முயற்சி செய்திருக்கிறேன். படப்பிடிப்பில் இயக்குநர் போட்ட கண்டிஷன் கடுமையாக இருந்தது. யாரிடமும் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, மீண்டும் மீண்டும் காட்சிகளைப் படமாக்கி தந்த டார்ச்சர் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதேன். படத்திலிருந்து வெளியேறிவிடுகிறேன் என்றேன். இன்னும் 2 நாள் நடித்துவிட்டு அந்த காட்சிகளைத் திரையிட்டு பார்த்துவிட்டு முடிவு செய் என்றார். காட்சியைப் பார்த்தபோது திருப்தி ஏற்பட்டதால் தொடர்ந்து நடித்தேன். இதை புகாராக கூறவில்லை. இந்தப் படத்தில் எனக்குப் பெயர் கிடைத்தால் அது இயக்குநருக்குத்தான் சேரும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com