மீண்டும் இணையும் கூட்டணி!

"எல்லாம் அவன் செயல்', "அழகர் மலை'  படங்களைத் தொடர்ந்து ஆர் கே - வடிவேலு கூட்டணி மீண்டும் இணைகிறது.
மீண்டும் இணையும் கூட்டணி!

"எல்லாம் அவன் செயல்', "அழகர் மலை'  படங்களைத் தொடர்ந்து ஆர் கே - வடிவேலு கூட்டணி மீண்டும் இணைகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவமுள்ள,  "நீயும் நானும் நடுவுல பேயும்' எனப் பெயரிடப்பட்ட இப்படம், மக்கள் பாசறை  நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகவுள்ளது. "தண்ணில கண்டம்' படத்தை இயக்கிய எஸ் என் சக்திவேல் எழுதி இயக்குகிறார்.  "எல்லாம் அவன் செயல்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்துள்ள "வைகை எக்ஸ்பிரஸ்' பிப்ரவரியில் திரைக்கு வருகிறது. நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா,  சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com