காலாவில் அரசியல்வாதி வேடத்தில் நானா படேகர்!

"காலா' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்று சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.
காலாவில் அரசியல்வாதி வேடத்தில் நானா படேகர்!

"காலா' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்று சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்காக வரும் 24-ஆம் தேதி மீண்டும் மும்பை செல்லவுள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படத் தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல்வாதியாக அவர் வேடம் ஏற்கிறார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ் நடிப்பதாக புதுதகவல் வெளியாகி உள்ளது.  ஹுமா குரோஷி, அஞ்சலி பட்டில் வேடங்கள் எவை என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். படத்தைப் பொறுத்தவரை தாதா ஒருவரின் வாழ்க்கை கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கமர்ஷியல் அம்சங்களுக்காக அரசியல் பின்னணி காட்சிகளும் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com