புதுமுகங்கள் நடிக்கும் வீரவம்சம்

ஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வீரவம்சம்'. செல்வம்,
புதுமுகங்கள் நடிக்கும் வீரவம்சம்

ஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வீரவம்சம்'. செல்வம், அனிதா ஆகிய புதுமுகங்களோடு ராதா ரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பகவதி பாலா. சொற்கள் உண்டாக்கும் தாக்கம்தான் படத்தின் கரு. சேலம் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆத்தூர் அருகில் உள்ள நாவலூர் கிராமத்தில் திருவிழா அரங்குகள் அமைக்கப்பட்டு, நிஜத் திருவிழா நடப்பது போன்று காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில காட்சிகள் மதுரை, திருநெல்வேலி பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com