2017-ல் வெளியாகி பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளான படங்கள் எவை?

தமிழ் திரைப்படங்களின் தரம் உலகத் திரைப்படங்களுக்கு நிகரானது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
2017-ல் வெளியாகி பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளான படங்கள் எவை?

தமிழ் திரைப்படங்களின் தரம் உலகத் திரைப்படங்களுக்கு நிகரானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கதையம்சம் அதிகமில்லாத, சாராமற்ற கமர்ஷியல் படங்களே இங்கு பெரும் வெற்றிப் பெறுகின்றன என்ற விமரிசனம் நெடுங்காலம் இருந்து வந்தது. ஆனால் அத்திப் பூத்தாற் போல சில நல்ல படங்கள் வெளிவந்து திரை ஆர்வலர்களுக்கு விருந்தளித்து வருகின்றன என்பதும் உண்மை. 

2017-ம் ஆண்டைப் பொருத்தவரையில் தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் தொடங்கிவிட்டது என்று சொல்ல முடியும். காரணம் சிறிய பட்ஜெட்டில் வெளியான பல படங்கள் தரமானதாகவும் அதே சமயம் கதையம்சம் உடையவதாகவும் அமைந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 300 படங்கள் தயாரிக்கப்பட்டு ஏறக்குறைய 200 படங்கள் மட்டுமே திரைக்கு வருகின்றன என்கிறது ஒரு புள்ளிவிபரம். சில படங்கள் பூஜை போட்டதுடன் நின்றுவிடும், சில படங்கள் பாதி ஷூட்டிங் வரை நடந்து, ஏதாவது ஒரு பிரச்னையில் நிறுத்தப்படும். இன்னும் சில படங்கள் முழுவதும் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் முடங்கிவிடும். எல்லாவற்றையும் மீறி சில படங்களே வெளிவருகின்றன. அப்படி வெளியான சில படங்கள் தியேட்டர் பிரச்னை, வரி அதிகம், டிவிடி பைரசி போன்ற பிரச்னையால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே ஓடும்.

சில படங்கள் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து, அதற்கு நேர் எதிராக இருந்துவிடுவதால் தோல்விப் படமாகிவிடும். மேலும் சமூக வலைத்தளங்களின் சில அரைகுறை விமரிசனங்கள், வசை போன்றவற்றாலும் சில படங்கள் பாதிக்கப்படுகின்றன. யாரும் எதிர்பார்க்காத சில படங்கள் வெகுவாக ரசிக்கப்படும். இதன் மூலம் திரைத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், நல்ல படங்களை ரசிகர்கள் நிச்சயம் கைவிடமாட்டார்கள். போலவே பெரிய பட்ஜெட், சூப்பர் ஹீரோ என்று பல விஷயங்கள் இருந்தாலும், பிடிக்காத படங்களை புறக்கணித்துவிடுவார்கள்.

இந்த வருடம், 2017-ல் கிட்டத்தட்ட 150 தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் எத்தனை படங்கள் வெற்றி வாகை சூடியது, எத்தனை படங்கள் விமரிசனங்களுக்கு உள்ளானது, எவை சர்ச்சைக்குள்ளானது என்று பார்க்கலாம். 

ரசிகர்கள் வரவேற்ற படங்கள்

குற்றம் 23, துருவங்கள் பதினாறு, எமன், மரகத நாணயம், மீசையை முறுக்கு, கருப்பன், காற்று வெளியிடை, மேயாதமான், அவள், அதே கண்கள், மாநகரம், கவண், பா பாண்டி, ஒரு கிடாயின் கருணை மனு பாகுபலி-2, குரங்கு பொம்மை, போகன், விஐபி 2,  சிங்கம் 3, விக்ரம் வேதா, துப்பறிவாளன், தரமணி, மகளிர் மட்டும், மெர்சல், ஹரஹர மகாதேவகி, அறம், அண்ணாதுரை, தீரன் அதிகாரம் ஒன்று, சத்யா, அருவி.

வசூலில் அள்ளிக் குவித்த படங்கள்

ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பறிவாளன், விஐபி 2,  சிங்கம் 3, பைரவா, விக்ரம் வேதா, மெர்சல், விவேகம், பாகுபலி-2, ஆகியவை. இதில் பாகுபலி நம்பர் ஒன் நிலையில் உள்ளது. 

திரை விமரிசகர்களைக் கவர்ந்த படங்கள்

அதே கண்கள், மாநகரம், கவண், பா பாண்டி, பாகுபலி-2, விக்ரம் வேதா, துப்பறிவாளன், 8 தோட்டாக்கள், தரமணி, மெர்சல், மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி.

பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கு உள்ளான படங்கள்

காற்று வெளியிடை, மெர்சல், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி

மேற்சொன்ன படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்களை இயக்கியவர்கள் அறிமுக இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா ஒரு மாற்றுப் பாதையை நோக்கி மெள்ள அடியெடுத்து வைத்துவிட்டது என்பது நிச்சயம் மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com