ஹிட்ச்காக் படங்கள் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வது ஏன்?

உள்ளூர் ரசிகர்களாக இருந்தாலும் சரி உலக ரசிகர்களாக இருந்தாலும் சரி சினிமாவைப்
ஹிட்ச்காக் படங்கள் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வது ஏன்?

உள்ளூர் ரசிகர்களாக இருந்தாலும் சரி உலக ரசிகர்களாக இருந்தாலும் சரி சினிமாவைப் பார்த்து ‘மெய்’ மறப்பவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான ஆராய்ச்சி இது.

திரில்லர் வகைத் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்தவர் ஆல்பிரட் ஹிட்ச்காக். சினிமா எனும் கலையை மிக நேர்த்தியாக பயன்படுத்தி எல்லா வகை மக்களும் புரிந்து கொள்ளும் விதமான திரைப்படங்கள் எடுத்து வெற்றி கண்ட முதல் தர இயக்குனர்களில் முக்கியமானவர் ஹிட்ச்காக். அவருடைய படங்களைப் பார்க்கும் போது விறுவிறுப்பிலும் பயத்திலும் உள்ளங்கை வியர்த்துவிடும், இதயத் துடிப்பு சற்று அதிகரிக்கும் என்பது உண்மைதான். இதற்கு அறிவியல்ரீதியான காரணம் உண்டு என்பது வியப்பாக உள்ளதா?

ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் செய்த ஆய்வொன்று சுவாரஸ்யமானது. ஹிட்ச்காக் படங்களைப் காணும் போது பார்வையாளர்களின் மூளைச் செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ந்தனர் நிபுணர்கள். இந்த ஆராய்ச்சியில் ஹிட்ச்காக் படங்களைப் பார்க்கும் போது அவர்கள் மூளைக்குள் எவ்விதமான செயல்பாடு இருந்தது, இதே வகையான படங்கள் எடுத்துள்ள பிற இயக்குனர்களின் படங்களைப் பார்க்கும்போது அதன் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று இரண்டு கோணத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

ஹிட்ச்காக் படங்களில் முக்கியமான விறுவிறுப்பான காட்சிகளின் போது, பார்வையாளர்களின் கவனம் முழுவதும் சுவாரஸ்யமான திரைக்கதையில் குவிந்துவிடுகிறது என்பதை அறிந்தார்கள். மற்ற படக் காட்சிகளின் போது அவர்களின் கவனம் வேறு விஷயங்களில், சுற்றுப்புறங்களில் திசை திரும்பிவிடுகிறது.


 
நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் போது சுற்றியுள்ள விஷயங்கள் மறந்து, திரையரங்கையே கூட மறந்த நிலைக்குச் சென்று விடுவதாகப் பலர் கூறியுள்ளார்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மனோதத்துவ மருத்துவர் மாட் பெஸ்டெக். காட்சிப் படிமங்களும், அது தரும் ஆழமான பாதிப்பினால் தங்களுடைய சுயத்தை மறந்து திரைப்பட கதாபாத்திரங்களின் பிரச்னைக்குள் தங்களைப் பொருத்திப் பார்க்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் பங்குபெற்றவர்களை 10 வகையான சஸ்பென்ஸ் படங்களை பார்க்க வைத்தனர். அதில் ஹிட்ச்காக்கின் ‘நார்த் பை நார்த்வெஸ்ட்’ (North by Northwest), ‘தி மேன் ஹு ந்யூ டூ மச்’ (The Man Who Knew Too Much), ‘ஏலியன்’ (Alien), ‘மிஸரி’ (Misery) ஆகிய நான்கு படங்கள் திரையிடப்பட்டன. அரங்கத்தின் நடுவில் படம் திரையிடப்பட, விளிம்புகள் ஒளிரும் விதமாக செக் போர்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒளியமைப்பு அதிகமாகப் பார்க்கும்போது மூளையில் காட்சித் தகவல்கள் மாறுபடுவதை ஆராய்ச்சியாளர்கள் பார்த்தார்கள். விறுவிறுப்பான காட்சிகள் தோன்றும்போது, மூளைச் செயல்பாடு, அதன் முழு கவனத்தை திரையில் பதிய வைத்துவிட்டது மற்ற எதுவுமே அதற்கு முக்கியமில்லாதவை என்கிறார் மனோதத்துவயில் உதவிப் பேராசிரியர் எரிக் ஷுமேச்சர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் எது மிகச்சிறந்த படம் என்கிற ஒரு பிரபல பத்திரிகை ஆய்வொன்றை நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 2,045 படங்கள் பங்குபெற்றன. இந்த ஆய்வில் முதலில் ஆர்சல் வெல்ஸ் இயக்கி நடித்த சிட்டிசன் கேன் படமே முதலிடத்தில் இருந்தது. ஆனால் வாக்கெடுப்பில் 846 திரைப்பட விநியோகஸ்த்தர்கள், விமர்சகர்கள், திரைப்பட கல்வியாளர்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டும் கிம் நோவாக்கும் நடித்த வெர்டிகோவுக்கு போட்டனர். இப்படத்தை இயக்கியவர் ஹிட்ச்காக்

ஒரு பொலிஸ்காரர் எப்படி உயரத்தை கண்டு பயந்தார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் வெர்டிகோ. இறுதி வாக்கெடுப்பில் சிட்டிசன் கேனை விட வெர்டிகோ 34 வாக்குகள் கூடுதலாக பெற்றது. சிட்டிசன் கேன் திரைப்படம் போன்றே, வெர்டிகோவும் வெளியானவுடன் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட விமரிசனங்களையே எதிர்கொண்டது. காலம் தாண்டிய படைப்புக்கள் என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கான ஒரு சான்று வெர்டிகோ. இப்படத்துக்கு ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்களான மார்டின் ஸ்கார்செஸே, குவண்டன் டாரன்டிண்டோ, ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, வூடி ஆலன், மார்க் லெய் உட்பட பல பிலர் தம் ஆதரவை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com