காமசூத்ரா வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!: பிளேபாய் புகழ் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட்!

காமசூத்ரா வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!: பிளேபாய் புகழ் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட்!

பமீலா ஆண்டர்சன், மர்லின் மன்றோ, உமா துருமன் உள்ளிட்ட அயல்நாட்டுக் கனவுக் கன்னிகள் இடம் பெற்ற பிளே பாய் கவர் பேஜில், ஹைதராபாத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்று அங்கேயே மாடலிங் செய்யும் வாய்ப்பையும்

செர்லின் சோப்ராவைத் தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

இருந்தால் அது அதிசயம்... செர்லின் ஒரு மாடல், பாடகி, பாலிவுட் நடிகை என்பதைத் தாண்டி 2012 ஆம் ஆண்டில் உலகப் பிரசித்தி பெற்ற பிளே பாய் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்ற முதலும் கடைசியுமான ஒரே இந்திய நடிகை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பிளேபாய் பத்திரிகையின் அட்டையில் ஷெர்லின் அளித்த நிர்வாண போஸுக்குப் பின் உலகம் முழுக்க ஷெர்லின் புகழ் பரவியது.

  • அதைத் தொடர்ந்து 2013, டிசம்பர் மாதம் எம்.டி.வியின் புகழ்பெற்ற ஷோவான 'ஸ்பிளிட்ஸ் வில்லா சீஸன் 6' ஐத் தொகுத்தளிக்கும் வாய்ப்பு ஷெர்லினுக்குக் கிடைத்தது.
  • அது மட்டுமல்ல, இந்தி பிக்பாஸ் சீஸன் 3- ல் போட்டியாளராகக் கலந்து கொண்டு 27 ஆம் நாள் போட்டியிலிருந்து வெளியேறியவர் என்பதும் அவருக்கான அடையாளங்கள்.
  • அதோடு ரூபேஷ் பாலின் 'காமசூத்ரா 3D' திரைப்படத்தில் ஷெர்லினை கதாநாயகியாக அறிவித்து அத்திரைப்படத்தின் டிரெய்லர்  '66 ஆவது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில்' ஒளிபரப்பானது. ஆனால் பிறகு என்ன காரணத்தாலோ, தன்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று அறிவித்து ஷெர்லின் அதிலிருந்து விலகிக் கொண்டார். 

அதெல்லாம் இருக்கட்டும்... பமீலா ஆண்டர்சன், மர்லின் மன்றோ, உமா துருமன் உள்ளிட்ட அயல்நாட்டுக் கனவுக் கன்னிகள் இடம் பெற்ற பிளே பாய் கவர் பேஜில், ஹைதராபாத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்று அங்கேயே மாடலிங் செய்யும் வாய்ப்பையும் பெற்றவரான இந்த தென்னிந்தியப் பெண் இடம் பெற்றது எப்படி? அதிலும்...

அப்பட்டமான நிர்வாணப் படங்களை முகப்புப் பக்கத்தில் வெளியிடும் பிளே பாய் பத்திரிகையில் இடம்பெறத் துணிந்தது எப்படி?

அதை ஷெர்லினே சொல்லக் கேட்டால் தான் சுவாரஸ்யமாக இருக்கும்... 

இதை ஒரு நிருபர் அவரிடமே கேட்டு வைக்கப் படு கேஷுவலாக வருகிறது பதில்; 

'ஒரு மே மாதத்தில் திடீரென்று நினைத்துக் கொண்டு தான் பிளேபாய் ஸ்தாபகர் ஹியூ ஹெஃப்னரைச் சந்தித்தேன்... அதைத் தொடர்ந்து பிளே பாய் இதழின் அட்டையில் இடம் பெறுவதற்கான எனது ஆசைகளை ஒரு கடிதமாக எழுதி அவருக்கு அனுப்பினேன். பிறகு பிளேபாயின் கிரியேட்டிவ் டீம் என்னைப் பற்றி இணையத்தில் முழுமையானதொரு தேடுதல் ஆய்வை நடத்தி முடித்தது, அதன் பின்னரே என் வேண்டுகோளை ஏற்று அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பின் நடந்தவை உலகறிந்த வரலாறு.'

- என்று கூறிச் சிரிக்கிறார் செர்லின்.

உங்களது பெற்றோர் மற்றும் பள்ளிப்பருவத்தைப் பற்றி?

'அப்பா கிறிஸ்தவர்... அவர் ஒரு டாக்டர். அம்மா இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். பிறந்தது பழைய ஆந்திராவின் ஹைதராபாத்தில், முதலில் அம்மா, அப்பா எனக்கு வைத்த பெயர் மோனா சோப்ரா, மோனா சோப்ராவாக ஹைதராபாத்திலிருந்த ‘ஸ்டான்லி ஹை ஸ்கூலில்’ பள்ளிப்படிப்பை முடித்தேன். பிறகு கல்லூரிக்காக செகந்திராபாத்தில் இருக்கும் ’செயிண்ட் ஆன்ஸ் பெண்கள் கல்லூரியில்’ சேர்ந்தேன். ஆனால் அதற்குள் எனக்கு எப்படியாவது பிரபலமாகியே தீர வேண்டும் என்ற ஆசை வலுத்து விட்டதால் கல்லூரிப் படிப்பை முழுதாக முடிக்காமலே 1999 ல் ‘மிஸ் ஆந்திரா ’போட்டியில் கலந்து கொண்டு மிஸ் ஆந்திராவாக மகுடம் சூட்டப்பட்டேன். அதற்குப் பிறகு நான் கல்வியைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.'

பிளேபாய் கவர் கேர்ளுக்கான ஃபோட்டோஷூட் எப்படி இருந்தது? 

'அங்கே நான் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவள், என்னைச் சூழ இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தியரில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸாகவே உணர்ந்தேன். ஆனால் அங்கே அவர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம் மற்றும் மரியாதை அனைத்தையும் இப்போது நினைத்துப் பார்க்கையில் மிக, மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். அங்கே, பிளேபாய் போட்டோஷூட் தளத்தில் நான் உணர்ந்த சுதந்திரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அது மிக, மிகப் பரிசுத்தமான உணர்வு, முற்றிலும் அந்நியமான அந்த இடத்தில் அதுவரை நான் அறிந்திராத அந்நியர்களுடன் பணிபுரிந்த போது, அங்கு அனைவருமே என் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார்கள். அங்கிருந்த அனைவருமே அவரவர் துறையில் வல்லுனர்கள் மட்டுமல்ல மிக மிக புரஃபஷனல் உணர்வு கொண்டவர்களும் கூட என்பதால் எனக்கு அவர்களுடன் பணியாற்ற லகுவாக இருந்தது. ஒருமுறை நான் பிளே பாய் இதழின் அட்டைப்படத்தில் தோன்ற வேண்டும் என்று முடிவு செய்தபின், அதைப் பற்றி மேலும் சிந்தித்துக் குழப்பிக் கொள்ளவே இல்லை. ஒரு முறை முடிவு செய்து விட்டேன்... இனி அதைப் பற்றி யோசிக்க எதுவுமில்லை. நான் அதற்காகவே பிறந்திருக்கிறேன். அதன் மூலம் வரலாற்றில் என் பெயர் இடம்பெறும் என்று நம்பினேன். என் கனவு பலித்தது.'

பிளே பாய் ஃபோட்டொஷூட்டில் நிர்வாணமாகப் போஸ் கொடுத்தது உங்களுக்கு ரிஸ்க் ஆகத் தோன்றவில்லையா?

'உலகுக்கு காமசூத்ராவை வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!

பிளேபாய் கவர் கேர்ள் ஆகப் போகிறேன் என்றதும்... ‘இந்தியா போன்ற நாட்டில் ஒருமுறை பிளேபாய் போன்ற ‘அடல்ட் ஐகானிக்’ பத்திரிகையில் இடம் பெற்ற பிறகு மக்கள் என்னை சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் அதற்குத் தான் லாயக்கு! என்று முத்திரை குத்தப் பட்டு அது மாதிரியான படங்களில் தான் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற நேரிடும் என்றெல்லாம் பலர் பயம் காட்டினார்கள். ஆனால் அதையெல்லாம் நான் நம்பவில்லை. இந்த உலகிற்கு காமசூத்ராவை வழங்கியது இந்தியத் துணைக்கண்டம் தான் எனும் போது நிர்வாணம் அங்கே ஒன்றும் புதிய விஷயமில்லையே! எனக்கு முன்பே பாலிவுட்டில் கவர்ச்சிக்கென்று தனியாக நடிகைகள் இருந்தார்கள். பல கதாநாயகிகளும் கூட கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொடாத எல்லை எதுவென்றால் அயல்நாட்டுக்குப் போய் பிளேபாய் ஷூட்டில் கலந்து கொள்ளாதது ஒன்று மட்டுமே! அதை நான் செய்தேன் என்பது மட்டும் தான் எனக்கும் அவர்களுக்குமான வித்யாசம். மற்றபடி நான் மட்டுமே முதன்முதலாக அதீத கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதையெல்லாம் என்னால் ஒப்புக் கொள்ளவே முடியாது.'

ஒரு கிளாமர் க்வீனாக வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!

'எனக்கு யாரிடமும் சென்று இதைச் செய்யக்கூடாது, இதைத்தான் செய்யவேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதில் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை. நான் என்னைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கையை தினந்தோறும் உயிர்ப்புடன் என் இஷ்டத்துக்கு நான் வாழ விரும்புகிறேன். எனது நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களுடன் நான் ஒவ்வொரு நொடியிலும் அசலாக வாழ விரும்புகிறேன்.'

உங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு?

பிளேபாய் போட்டோ ஷூட்டின் போது எனக்கென்று நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர் என்னிடம், உனது உடல் இயல்பிலேயே கவர்ச்சிகரமாக இருப்பதால், புகைப்படம் எடுத்து முடித்த பின் அதில் மேலும் அழகூட்டவோ, கவர்ச்சியூட்டவோ ஏர் பிரஸ்ஸிங், ஃபோட்டோஷாப் உள்ளிட்ட கிராபிக்ஸ் வேலைகள் செய்யத் தேவை இருந்ததில்லை என்று கூறினார். அந்தப் பாராட்டை நான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய காம்ப்ளிமெண்டாக உணர்ந்தேன். 

திரைப்பட வாய்ப்புகள்...

திரைப்படங்களைப் பொறுத்தவரை எனக்கான வாய்ப்புகளை நானே தான் எனது முயற்சியால் உருவாக்கிக் கொள்கிறேன். வாய்ப்புகள் என்னைத் தேடி வருமாறு செய்யும் திறமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அதுமட்டுமல்ல நான் எப்போதுமே எனக்கு நன் வரையறுத்துக் கொண்ட வகையிலேயே வாழ விரும்புகிறவள். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இப்போதைக்கு வாய்ப்புக் கிடைக்குமானால் மேலும் மேலும் அதிகமாக பிளேஎ பாய் கவர் ஃபோட்டோஷூட்களில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்குக் கிடைத்த புகழ் வெளிச்சத்தைப் பற்றி...

இந்திய மீடியாக்கள் ஒவ்வொரு நொடியும் நான் என்ன செய்கிறேன் என்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதைக் காணும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. புகழ் வெளிச்சம் எனக்கு எப்போதுமே மிகப்பிடித்தமான விஷயம். அதை சந்தோசமாக அனுபவிக்கிறேன்.

உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புகழீட்ட நினைக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது பிரபலமாகும் ஆசைகள். ஆனால் அதை யார், எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது அவர்களுக்கான சமுதாய அங்கீகாரம். ஷெர்லின் சோப்ராவைப் பொறுத்தவரை தான் ஒரு செக்ஸ் பாம் ஆக இருப்பதில் அவருக்கு எந்த விதமான வருத்தங்களும் இல்லை. நான் இதற்காகத் தான் பிறந்திருக்கிறேன். இந்த விதமாகப் புகழடைந்து வரலாற்றில் என் பெயர் நிலைக்க வேண்டும் என்பது தான் எனக்கான விதியாக இருக்கக் கூடும் என்று அவர் ஒரு ஆங்கில ஊடகப் பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவிக்கிறார். சன்னி லியோன்  ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் நடித்ததைப் போல ஷெர்லின் சோப்ராவும் தமிழில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம்  ‘யுனிவர்சிட்டி’ என்ற பெயரில் ஜீவன், கஜாலா நடிப்பில் 2002 ல் வெளியானது. அதாவது ஷெர்லின் பிளே பாய் க்வீனாக ஆவதற்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு. இதைப் போலவே தெலுங்கிலும் சில படங்களில் செர்லின் நடித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com