வீஜேவா இருந்தா காலமெல்லாம் வீஜேவாவே இருக்கனுமா? நான் மாறிட்டேன் மச்சான்!: கிரேய்க்

கல்லூரிகளில் கிரேய்க் மற்றும் ஸ்ரீரேயா ரெட்டிக்கு பிரத்யேக ஃபேன் ஃபாலோயிங் கிளப்புகள் கூட இருந்தன. பெண்களுக்கு க்ரேய்க் என்றால் கிறுக்கு, பையன்களுக்கு ஸ்ரீரேயா என்றால் சிரி...சிரி... சிரிய்யாவாக ஒரு 
வீஜேவா இருந்தா காலமெல்லாம் வீஜேவாவே இருக்கனுமா? நான் மாறிட்டேன் மச்சான்!: கிரேய்க்

கிரேய்க் ஞாபகமிருக்கா?

எஸ் எஸ் மியூசிக் வீஜே கிரேய்க் என்று சொல்லித்தான் நினைவூட்ட வேண்டியிருக்கிறது இப்போது. ஆனால், கிரேய்க், எஸ் எஸ் மியூசிக்கில் வீஜேவாக அசத்திக் கொண்டிருக்கையில் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்பேர். 2000 ஆம் ஆண்டு வாக்கில் ஸ்கூல் ஃபைனல் மற்றும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிரேய்க் என்றால் அப்படியொரு பித்து. காரணம் கிரேய்க்கின் மழலைத் தமிழ் வர்ணனை. அப்போது எஸ் எஸ் மியூசிக் கலர்ஃபுல்லான சேனல் மட்டுமல்ல யூத்ஃபுல்லான சேனலும் கூட. இன்றைக்கு இருக்கும் அத்தனை சேனல்களின் ஆங்கர்களுக்கும் ரோல் மாடல்களாக எஸ் எஸ் மியூசிக் ஆங்கர்களைக் குறிப்பிட்டால் அதல் வியப்பதற்கு ஏதுமில்லை. எஸ் எஸ் மியூசிக் ஆங்கர்களின் உடையும் சரி உடல்மொழியும் சரி அன்றைய கல்லூரி மாணவர்கள் பிரமிக்கத் தக்கவண்ணம் அலாதியானது. அந்த ஃபர்முலாவைக் காப்பியடித்து தான் இன்றைய ஆங்கர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அது மிகை செக்ஸியாக இருந்தாலும் அன்றைய நிலையில் அது ஒரு போல்டான முயற்சி தான்.

விஷாலின் அண்ணி ஸ்ரியா ரெட்டி, கிரேய்க், பூஜா, லேகா வாஷிங்டன், பலோமா, எனப் பல யூத்ஃபுல் அண்ட் கிளாமர் ஆங்கர்கள் கிளம்பி வந்து இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்த அந்தக் காலகட்டத்தின் தென்னிந்திய எம் டிவியாகக் கொண்டாடப்பட்டது எஸ் எஸ் மியூசிக். (சதர்ன் ஸ்பைஸ் மியூசிக்). இதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அத்தனை ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் மழலைத்தனமாக பிராந்திய மொழிகளும் பிராந்தி, விஸ்கி போல அவ்வப்போது அந்தச் சேனலில் பரிமாறப்படுவது உண்டு. 

கல்லூரிகளில் கிரேய்க் மற்றும் ஸ்ரீரேயா ரெட்டிக்கு பிரத்யேக ஃபேன் ஃபாலோயிங் கிளப்புகள் கூட இருந்தன. பெண்களுக்கு க்ரேய்க் என்றால் கிறுக்கு, பையன்களுக்கு ஸ்ரீரேயா என்றால் சிரி...சிரி... சிரிய்யாவாக ஒரு மயக்கம். 

இன்றைய ரியாலிட்டி ஷோக்களுக்கு அன்றே வித்திடும் வகையில் எஸ்.எஸ் மியூசிக்கில் வாய்ஸ் ஹண்ட், வீஜே ஃபேக்டர், லாஞ்ச்பேட், டான்ஸ் வித் மி, உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் பட்டையைக் கிளப்பின.

இப்படியெல்லாம் ஜே ஜே வென தென்னிந்திய சேனல் வட்டாரத்தில் கொடி கட்டிப் பறந்த எஸ் எஸ் மியூசிக் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காணாமலே போனது. சேனல் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. அங்கிருந்த வீஜேக்கள் அனைவரும் அவரவர் வழியைப் பார்த்துக் கொண்டு யாருக்கு எங்கு செளகர்யமோ அங்கு சென்றார்கள்.

90 களில் பிறந்த இளம்பெண்களின் செல்ல வர்ணனையாளர் கிரேய்க் என்ன ஆனார்? அவருக்கு சக ஆங்கர் பூஜாவுடன் திருமணமானது. கிரேய்க் எஸ் எஸ் மியூசிக்கில் இருந்து விஜய்க்குப் போய் அங்கிருந்து ஜெயாவுக்கு ஜம்ப் ஆகி பிறகு ஆங்கிலப் பத்திரிகைகளில் பத்தி எழுதி பின்னொரு நாளில் திடீரென ஞானோதயம் பெற்று இன்னும் தானொரு வீஜேவாகத்தான் இயங்கியாக வேண்டுமா? ஏன் மாற்றி யோசிக்கக் கூடாது? என்று யோசித்து மொத்தமாக வீஜே வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டார். நடுவில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் மணமுறிவுக்கும் ஆளானார். 

ஊரெல்லாம் கிரேய்க் ஃபீவர் பிடித்துத் திரிந்த காலங்களில் எங்கு சென்றாலும் சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்பட்ட காட்சி சடாரென மாறியது. பல்வேறு சேனல்கள் முளைத்தன. வெவ்வேறு வீஜேக்கள் இளம்பெண்களின் டார்லிங்குகள் ஆக முயன்றி சில காலம் ஆகிப் பிறகு ஃபேட் அவுட் ஆகிக் கொண்டே இருந்த காலகட்டத்தில் மக்கள் கிரேய்க் என்றதும் கொஞ்சம் நெற்றி மேட்டைத் தட்டி யோசிக்கத் துவங்க இந்த வீஜே வேலைக்கும் டாய்லெட்டில் கசக்கி எறியப்படும் டிஸ்யூ பேப்பருக்கும் அதிக வித்யாசமில்லை என்று உணர்ந்த கிரேய்க் எல்லாவற்றிலுமிருந்தும் விலகி மார்கெட்டிங் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

வெளிநாடுகளுக்குப் பறந்து அங்கிருந்த கல்லூரிகளில் ஒரு சேனல் தொடங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு மாணவனாக அனுபவபூர்வமாகக் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

கிரேய்க்கின் வாழ்க்கையில் ஏன் இத்தனை மேடு பள்ளம்? வொய் கிரேய்க் என்றால்?  வீஜே வா இருந்தா, காலமெல்லாம் வீஜேவாவே தான் இருக்கனுமா? நான் மாறிட்டேன் மச்சான் என்பாரோ என்னவோ!

Concept Courtesy: IndiaGlitz youtube video.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com