‘சென்னையின் சமையல் ராணி’ போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்!

தினமணி இணையதளம் ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் சிலருடன் இணைந்து நடத்தும் சென்னையின் சமையல் ராணி போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்.
‘சென்னையின் சமையல் ராணி’ போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்!

தினமணி இணையதளம் ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் சிலருடன் இணைந்து நடத்தும் சென்னையின் சமையல் ராணி போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல். முன்னதாகச் சொல்லப்பட்ட வரையறைகள் தான் என்ற போதும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டிக் கொள்வது நல்லதல்லவா?!

  • மெனு: சைவம்
  • ஐட்டம்ஸ்: ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட்.
  • போட்டியாளர்கள் இவை மூன்றையுமே சமைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறைகளில் ஒன்று.
  • ஆனால், ஒவ்வொரு போட்டியாளருமே மூன்றில் ஏதாவது ஒரு ஐட்டத்தைத் தான் சமைக்கப் போகிறார்கள். அந்த ஐட்டம் எது என்பதை போட்டி நாளன்று குலுக்கல் முறையில் போட்டியாளர்களே தேர்ந்தெடுக்கலாம்.
  • குலுக்கலில் யாருக்கு என்ன ஐட்டம் வருகிறதோ, அதைத்தான் சமைக்க வேண்டும். சமைக்கும் அளவு இரு நபர்களுக்குப் போதுமான அளவு இருந்தால் உத்தமம்.
  • சமைப்பதற்கு இண்டக்‌ஷன் அடுப்பு வசதி செய்யப்பட்டுள்ளதால் அதில் சமைப்பதற்குத் தோதாக மட்டுமே சமையல் பாத்திரங்கள் கொண்டு வர வேண்டும்.
  • அரைப்பதற்கு பொதுவாக 6 மிக்ஸிகள் அளிக்கப்படும். நேர விரயத்தைத் தவிர்க்க நினைப்பவர்கள் தங்களது சொந்த மிக்ஸிகள், ஜூஸர் மற்றும் பிளெண்டர்களையும் கொண்டு வந்து பயன்படுத்தலாம்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்குவதற்கு கத்தி, தேங்காய் துருவி, சமைத்த பதார்த்தங்களை அழகாக டிஸ்பிளே செய்யத் தேவையான தட்டுகள், ஸ்பூன் மற்றும் அலங்கார ஸ்ட்ரேக்கள், கிச்சன் டவல் கொண்டு வர மறக்க வேண்டாம்.
  • தினமணி இணையதளம் சார்பில் முன்பே தெரிவித்திருந்தபடி மெயின் கோர்ஸ் ஐட்டங்களைச் சமைக்க பிரியாணி அரிசி உட்பட அடிப்படைத் தேவைகளான சில காய்கறிகள், புதினா, கொத்தமல்லி கட்டுகள் வழங்கப்படும். மசாலாக்கள் மற்றும் உணவை அலங்கரிக்கத் தேவையான பிற பொருட்கள் அனைத்தும் போட்டியாளர்களின் சாய்ஸ்.
  • ஸ்டார்ட்டர்கள் சமைப்பவர்களுக்கு முன்னதாகத் தெரிவித்தபடி ஃபுடிக்ஸ் கிறிஸ்பி மிக்ஸ் பாக்கெட்டுகள், டொமட்டோ சூப் பாக்கெட்டுகள் வழங்கப்படும். அவற்றைக் கொண்டு அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப இரண்டு விதமான ஸ்டார்ட்டர்கள் தயாரிக்க வேண்டும். (வேறு மசாலாக்களைப் பயன்படுத்தக்கூடாது)
  • டெஸ்ஸர்ட் தயாரிப்பவர்களுக்கு ஃபுடிக்ஸ் ஹல்வா மிக்ஸ் பாக்கெட்டுக்கள் மற்றும் மில்க்‌ஷேக் பாக்கெட்டுகள் வழங்கப்படும். உங்களுக்கு விருப்பமான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு வந்து இரண்டு விதமான டெஸ்ஸர்ட்டுகள் தயாரிக்க வேண்டும். *(வேறு மசாலாக்களைப் பயன்படுத்தக் கூடாது)

சமையல் போட்டி நடைபெறும் நாள் : செப்டம்பர் 1, சனிக்கிழமை.


நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை


 இடம்: எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.

சமையல் போட்டிக்கான கால அளவு: 1 மணி நேரம்.

சென்னையின் சமையல்ராணி போட்டியின் நடுவர்கள்

‘நளமகாராணி’ என்று தமிழ்நாடு கொண்டாடும் மல்லிகா பத்ரிநாத், சென்னையின் பிரபல உணவியல் வல்லுனர்களில் ஒருவரான மீனாக்‌ஷி பெட்டுகோலா, ‘அறுசுவை அரசி’ ரேவதி மூவரும் தான் சென்னையின் சமையல் ராணி போட்டிக்கான நடுவர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். 

‘நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.’

நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். தினமணி இணையதளம் நடத்தும் இந்த பிரம்மாண்ட சமையல் போட்டிக்கான பரிசுகளும் பிரமாதமானவையாகவே இருக்கும்.

  • மெகா சமையல் போட்டிக்கென இதுவரை வந்து குவிந்திருக்கும் விண்ணப்பங்களில் இருந்து மொத்தம் 60 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். அவர்களது பட்டியல் நாளை காலை தினமணி இணையதளத்தில் வெளியிடப்படும். குலுக்கல் முறையில் தங்களுக்கான ஐட்டங்களைத் தேர்வு செய்யவிருக்கும் போட்டியாளர்கள் அவரவர் தேர்வுக்கேற்ப 20 பேர் கொண்ட மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு சமையல் போட்டியில் பங்கேற்பார்கள்.
  • ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். மொத்தம் ஆறு பரிசுகளுடன், தினமணி இணையதளத்தின் ரொக்கப் பரிசு, மற்றும் போட்டியில் வென்று வாகை சூடி ‘சென்னையின் சமையல் ராணி’ விருது பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

பங்கேற்பீர்... பரிசுகளை வென்றிடுவீர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com