29 Jan 2010 12:25:59 AM IST
பி.டி. கத்தரிக்காய்: மத்திய அரசு தடைசெய்ய தீர்மானம்
புதுச்சேரி, ஜன. 28: பி.டி. கத்தரிக்காயை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என்று மத்திய அரசை, புதுச்சேரி அரசு கேட்டுக்கொள்ள வேண்டும் என உணவு உரிமைக்கான பிரசாரத்தின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
÷புதுச்சேரியில் உணவு உரிமைக்கான பிரசாரத்தின் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மரபணு மாற்று விதைகளையும், பயிர்களையும் பயிரிடவோ, விற்கவோ கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
÷மேலும் உணவு உரிமைக்கான கட்டளைகள் என்சிசி முகாம் நிறைவு குறித்து ஹோப் நிறுவன இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ் விளக்கினார். உணவு உரிமைக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் யுக்தி குறித்து சமூக நீதிக்கான மனித அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் லாரன்ஸ் விளக்கினார். இளங்குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்புத் தலைவர் லயோலா கல்லூரி பேராசிரியர் ஷண்முக வேலாயுதம், பல்நோக்கு சமூக சேவைச் சங்க அலுவலர் ராம்குமார் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.