09 Feb 2010 12:00:00 AM IST

தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா? 

நாகபுரி,​​ பிப்.​ 8: நாகபுரி டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க இந்தியா போராடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் 233 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.​ ​ இதனால் ஃபாலோ ஆன் பெற்று 2-வது இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா 2விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்களை எடுத்துள்ளது.
இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்தியா 259 ரன்கள் பின்தங்கியுள்ளது.​ இதனால் இந்திய அணி ஏறக்குறைய தோல்வியின் விளிம்பில் உள்ளது.​ தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் ஸ்டெயின் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 3 வது நாள் ஆட்டத்தை கம்பீரும்,​​ சேவாக்கும் தொடங்கினர்.​ தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.​ கம்பீர் கூடுதலாக ஒரு ரன் கூட சேர்க்காமல் 12 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களம் இறங்கிய தமிழக வீரர் எம்.​ விஜய்யும் ஏமாற்றமளித்தார்.​ 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெயின் பந்தில் அவர் ஸ்டெம்ப்களை பறிகொடுத்தார்.​ ​ அனுபவ வீரர் சச்சினாலும் ஸ்டெயினின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.​ 7 ரன்கள் எடுத்திருந்த போது அவரும் ஸ்டெயின் பந்தில் விக்கெட் கீப்பர் பெüச்சரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து சேவாக்குடன் மற்றொரு தமிழக வீரர் எஸ்.​ பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார்.​ சிறப்பாக விளையாடிய சேவாக் 134 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார்.​ அணியின் ஸ்கோர் 192 ஆக இருந்த போது 109 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் அவுட் ஆனார்.
இதனையடுத்து இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.​ கேப்டன் தோனி 6 ரன்களில் வெளியேறினார்.​ 56 ரன்கள் எடுத்த நிலையில் பத்ரிநாத் ஆட்டமிழந்தார்.​ ÷சாஹா ​(0),​ ஹர்பஜன் சிங் ​(8),​ ஜாகீர்கான் ​(2),​ அமித் மிஸ்ரா(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.​ இதனால் இந்திய அணி 233 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது.​ ​
இதனையடுத்து ஃபாலோ ஆன் முறையில் இந்தியாவை தொடர்ந்து பேட் செய்யுமாறு தென் ஆப்பிரிக்க கேப்டன் கேட்டுக் கொண்டார்.​ இதையடுத்து கம்பீரும்,​​ சேவாக்கும் மீண்டும் களம் இறங்கினர்.​ இந்த இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.​ ​
கம்பீர் 1 ரன்னும்,​​ சேவாக் 16 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.​ 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது.​ எம்.விஜய் 27 ரன்களுடனும்,​​ சச்சின் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.​ அவர் 16.4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.​ இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.​ இந்திய தரப்பில் சேவாக் மற்றும் பத்ரிநாத்தின் ஆட்டம் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
தென் ஆப்பிரிக்க அணியை விட இந்தியா 259 ரன்கள் பின்தங்கியுள்ளது.​ 4-வது நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிலைந்து நின்று ஆடாவிட்டால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியடையும் வாய்ப்பும் உள்ளது.
சுருக்கமான ஸ்கோர்​ தென் ஆப்பிரிக்கா:​​ முதல் இன்னிங்ஸ் 558/6 ​(டிக்ளேர்),​​ இந்தியா​ முதல் இன்னிங்ஸ் ​ 233​ (கம்பீர் ​(12),​ சேவாக் ​(109),​ எம்.விஜய் ​(4),​ சச்சின் ​(7),​ பத்ரிநாத்(56),​ தோனி(6),​ சாஹா ​(0),​ ஹர்பஜன் சிங் ​(8),​ ஜாகீர் கான்(2),​ அமித் மிஸ்ரா(0),​ இஷாந்த் சர்மா ​(0,​ அவுட் இல்லை).​ ஸ்டேயின் 7/51.)
2-வது இன்னிங்ஸ் 66/2 காம்பீர்-1,​ சேவாக்-16,​ விஜய்-27 ​(பேட்டிங்),​​ சச்சின் டெண்டுல்கர்-​ 15 ​(பேட்டிங்).

பெüச்சர் வெளியேறினார்!
​​ 3-வது நாள் ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பெüச்சருக்கு முதுகில் சுளுக்கு ஏற்பட்டது.​ இதனையடுத்து அவர் ஆட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.​ அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பர் பணியைத் தொடர்ந்தார்.​ இதனால் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.​ மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது.​ அவருக்கு ஏற்பட்டுள்ளது சாதாரண சுளுக்குதான் என்று டாக்டர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும்,​​ 2-வது டெஸ்டில் அவர் கண்டிப்பாக பங்கேற்பார்.​ அதற்குள் அவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.​

© Copyright 2008 Dinamani