10 Mar 2010 11:08:27 AM IST
கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா
திண்டுக்கல், மார்ச் 9: எம்.அம்மாபட்டி மீனாட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரியில், திங்கள்கிழமை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணை முதல்வர் ஆர். ரேகா தலைமை வகித்தார்.
மீனாட்சி கல்வி அறக்கட்டளைச் செயலர் எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் எம். அந்தோணிராஜ், தலைமை ஆசிரியர் ஆர். அழகர்சாமி, அறக்கட்டளை ஆலோசகர் ஜி. மூர்த்தி, உதவித் தலைமை ஆசிரியர் ஜி. ராமராஜ், மேலாளர் ஏ. ராஜு, கல்லூரி மாணவி சிவசங்கரி ஆகியோர் பேசினர்.
பேராசிரியை மோகனா, சர்வதேச மகளிர் தினம் ஓர் அறிவியல் பார்வை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
விரிவுரையாளர் எஸ். கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.