ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
First Published : 30 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
மும்பை, ஜூலை 29: தொடர்ந்து ஏறுமுகத்தில் மும்பை பங்குச் சந்தை உள்ளது. வியாழக்கிழமை 35 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 17,992 புள்ளிகளானது. ஜூலை 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 10 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்ததும் பங்குச் சந்தை ஏற்றம் பெற முக்கியக் காரணமாகும்.÷தேசிய பங்குச் சந்தையில் 12 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,408 புள்ளிகளானது.÷ஹெச்டிஎப்சி லிமிடெட், ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, ஹீரோ ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் கணிசமாக ஏற்றம் பெற்றன.÷அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 10.50 குறைந்து ரூ. 1,010.45-க்கு விற்பனையானது. இந்நிறுவனப் பங்கு புதன்கிழமை 3.1 சதவீதமும், வியாழக்கிழமை 1 சதவீதமும் சரிந்தது. கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு உற்பத்தி குறையும் என்ற தகவலால் தொடர்ந்து இந்நிறுவனப் பங்கு விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் இந்நிறுவனப் பங்கு மதிப்பு ரூ. 3.3 லட்சம் கோடி வரை சரிந்துள்ளது.÷ஹெச்டிஎப்சி பங்குகள் 3.03 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் 1.84 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகளின் விலை 1 சதவீதமும் உயர்ந்தன. ஹெச்டிஎப்சி வங்கி வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியதால் வங்கிப் பங்கு விலையும் உயர்ந்தது.÷மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 40 சதவீதம் உயர்ந்ததால் நிறுவனப் பங்கு விலை 0.9 சதவீதம் அதிகரித்தது. ÷ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 2.07 சதவீதமும் பார்தி ஏர்டெல் பங்கு விலை 1.46 சதவீதமும் சரிந்தது. கட்டுமானத் துறையில் முன்னணியில் திகழும் டிஎல்எப் நிறுவனப் பங்கு விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக ஒரு சதவீத சரிவைச் சந்தித்தது. முதல் காலாண்டில் இந்நிறுவன லாபம் 3.80 சதவீதம் அதிகரித்த போதிலும் பங்கு விலை சரிந்தது.÷ஜின்டால் நிறுவனப் பங்கு விலை 1.29 சதவீதமும், சிப்லா பங்கு விலை 1.21 சதவீதமும், ஓஎன்ஜிசி பங்கு விலை 1.19 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்கு விலை 1.1 சதவீதமும் சரிந்தது.÷மொத்தம் 1,476 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,410 நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. மொத்தம்ரூ. 4,609.,60 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. புதன்கிழமை ரூ. 5,028 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.