Friday, September 10, 2010 3:04 AM IST
Click
சினிமா
மதிகெட்டான் சாலை

First Published : 24 Jul 2010 12:00:00 AM IST


பரவலான பாராட்டுகளைப் பெற்ற "ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ஜி. பட்டுராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் "மதிகெட்டான் சாலை'. இதில் "கைபேசி எண்' படத்தில் நடித்த ஆதர்ஷ் கதாநாயகனாக நடிக்கிறார். புதுமுகம் சாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சிங்கமுத்து, காதல் தண்டபாணி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 படத்தின் பெயர்க்காரணம் குறித்து கேட்டால்...

 ""எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றித் திரியும் ஓர் இளைஞனை காதல் எப்படி மாற்றுகிறது என்ற வழக்கமான கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாகச் சொல்லுவதுதான் படம். முழு படத்தையும் பார்க்கும்போதுதான் தலைப்புக்கான காரணம் புரியும். இந்தப் படத்தில் தனுஷ் போன்ற ஒரு நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால், அவரைப் போன்ற தோற்றமுள்ள ஆதர்ஷை கதாநாயகன் ஆக்கியுள்ளோம். அனைத்துத் தரப்பினரும் விரும்பும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். தஞ்சை, கும்பகோணம், காரைக்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது'' என்கிறார் இயக்குநர்.

 இசை - ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் - விவேகா, ஜே.பிரான்சிஸ் கிருபா. ஒளிப்பதிவு - எஸ்.தாஜ். படத்தொகுப்பு - சுரேஷ் அர்ஸ். தயாரிப்பு - திருமலை இன்னோவேஷன்ஸ்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்