அனுமதியின்றி ஆடல் பாடல்: 16 பேர் மீது வழக்கு
First Published : 30 Jul 2010 01:54:08 PM IST
Last Updated :
கள்ளக்குறிச்சி, ஜூலை 29: அனுமதியில்லாமல் ஆட்டம் பாட்டத்துடன் பாட்டுக் கச்சேரி நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 16 பேரை போலீஸôர் தேடி வருகின்றனர். ÷கள்ளக்குறிச்சியை அருகே குதிரைச்சந்தல் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் ஆடிமாதத்தை முன்னிட்டு கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இரவில் பாட்டுக் கச்சேரியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்துள்ளது. இதற்கு போலீஸôர் அனுமதி பெறவில்லை. ÷இது குறித்து கச்சிராயபாளையம் போலீஸôர் பழனிவேல் உள்ளிட்ட 16 பேர்கள் மீது வழக்கு தொடர்ந்து தேடிவருகின்றனர்.