Friday, September 10, 2010 2:55 AM IST
Click
சென்னை
ரயில்வே அதிகாரியை பொதுநல அமைப்புகள் திடீர் முற்றுகை

First Published : 30 Jul 2010 01:57:04 PM IST


கடலூர், ஜூலை 29: கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரை, பொது நல அமைப்புகள் முற்றுகையிட்டுக் குரல் எழுப்பினர்.

÷கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், புதன்கிழமை லூப் லைன் தண்டவாளத்தில் முதல்முறையாக ரயில் இயக்கப்பட்டபோது, கட்டுமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நடைமேடையில் ரயில் பெட்டிகள் உரசிச் சென்றன.÷இதைப் பார்வையிடுவதற்காக, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்திலிங்கம் வியாழக்கிழமை திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்குச் சிறப்பு ரயிலில் வருகை தந்தார்.

÷அப்போது எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருபாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதைக் கண்டித்தும் ரயில்வே பொதுமேலாளரிடம் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். குப்பன்குளம் பகுதி மக்கள் ரயில் தண்டவாளத்தைக் கடந்து, பிரதானச் சாலைக்கு வருவதற்கு பாதை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

÷இதற்கு பதில் அளித்த கோட்ட மேலாளர் வைத்திலிங்கம், "கோரிக்கைகள் ஏற்கெனவே ரயில்வே துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தார்.

÷பொதுமேலாளர் வைத்திலிங்கத்திடம், மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் அளித்த மனு: தேவநாதசுவாமி கோயில், பாடலீஸ்வரர் கோயில் போன்ற யாத்திரை ஸ்தலங்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் சிவகுமார் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்