Wednesday, September 08, 2010 1:01 PM IST
Click
மதுரை
புதிய தமிழகம் கட்சிக் கூட்டம்

First Published : 30 Jul 2010 10:20:02 AM IST


பரமக்குடி, ஜூலை 29:     ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

   இக்கூட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சியின் நகர் செயலர் எம். ஆதி தலைமை வகித்தார். இளைஞரணி நகர் செயலர் எம்.ஜி. சுரேஷ் முன்னிலை வகித்தார்.

   கூட்டத்தில், அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயலாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

   இதில் கலந்துகொண்ட அதிமுக மாவட்டப் பொருளாளர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜன், நகர் செயலர் எம்.கே. ஜமால், பரமக்குடி தொகுதி கழகச் செயலர் ஆ. பாலுச்சாமி, மருத்துவ அணிச் செயலர் டாக்டர் எஸ். முத்தையா, எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் எம்.ஏ. முனியசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து கெüரவிக்கப்பட்டனர்.    இதில் ஏராளமான புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்