Wednesday, September 08, 2010 1:04 PM IST
Click
திருச்சி
ஆக. 17 மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்

First Published : 30 Jul 2010 11:27:08 AM IST


காரைக்கால், ஜூலை 29: புதுவையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக அமையும் என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலரும், எம்எல்ஏவுமான நாரா. கலைநாதன்.

     இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் புதன்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் மாநிலச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நாரா. கலைநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     புதுவையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டுக்காக, கட்சியின் காரைக்கால் மாவட்டம் சார்பில் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை காரைக்கால் பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான பி. தங்கராசு, மாநிலச் செயலரிடம் வழங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் மாநில செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நாரா. கலைநாதன் பேசியது:

     புதுவையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டன.

     இந்த ஆட்சிக்கு மாற்றாக புதிய அணி உருவாக்கப்பட்டு, புதிய ஆட்சி அமைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி புதுவையில் நடைபெறவிருக்கும் கட்சியின் மாநில மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார் அவர்.

     கூட்டத்துக்கு கட்சியின் கோட்டுச்சேரி கிளைச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் காரைக்கால் பொறுப்பாளருமான பி. தங்கராசு, நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, வி.எஸ். சிவம், மதியழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்