ஆடு திருட்டு வழக்கு: இருவருக்கு சிறை
First Published : 30 Jul 2010 12:51:49 PM IST
Last Updated :
அரூர், ஜூலை 29: கோட்டப்பட்டி அருகே ஆடு திருடிய வழக்கில் தொழிலாளிகள் இருவருக்கு தலா 2 மாதம் சிறை தண்டனை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கோட்டப்பட்டி அருகேயுள்ள பெரியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் விவசாயி கருணாநிதி. இவரது ஆட்டுப் பட்டியில் இருந்த ஆடு ஒன்று திருட்டுப் போனது. இது குறித்து அவர் கடந்த 8.7.2010-ல் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் முனவர்பேக் வழக்குப் பதிந்து பெரியப்பட்டி புதூரைச் சேர்ந்த சென்னன் மகன் சேட்டு (40), அதே ஊரைச் சேர்ந்த வேடிபூசாரி மகன் கோவிந்தன் (37) ஆகியோரை கைது செய்தார். இவ்வழக்கு அரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகராஜன், குற்றம்சாட்டப்பட்ட சேட்டு, கோவிந்தன் இருவருக்கும் தலா 2 மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.