Friday, September 10, 2010 2:25 AM IST
Click
வேலூர்
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்

First Published : 30 Jul 2010 12:51:58 PM IST


தருமபுரி, ஜூலை 29: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி எம்பி இரா. தாமரைச்செல்வன் அண்மையில் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

  இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

  தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது போல தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஒதுக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய அளவில் அமைக்கப்படவுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும் என மக்களவையில் பேசியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்