Friday, September 10, 2010 3:00 AM IST
Click
வேலூர்
மாவட்ட அறிவியல் மையத்தில் உயர்கல்வித்துறைச் செயலர் ஆய்வு

First Published : 30 Jul 2010 01:05:15 PM IST


வேலூர், ஜூலை 29: வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2.98 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம், சேர்க்காட்டில் கட்டப்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டடங்கள் ஆகியவற்றை உயர்கல்வித் துறைச் செயலர் க.கணேசன், மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 அறிவியலின் அடிப்படை தத்துவத்தை தெரிந்து கொள்ளும் வகையிலும், அங்குள்ள கருவிகளை இயக்கி எந்தத் தத்துவத்தில் அதன் செயல்பாடு உள்ளது என்பதை புரிந்துகொள்ளும் வகையிலும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஆய்வு செய்தனர்.

 மேலும், பல்கலைக்கழக நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலை வைப்பது. தேவையான நிலம் ஒதுக்கீடு செய்வது போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

 மாவட்ட வருவாய் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், துணைவேந்தர் ஜோதிமுருகன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பச் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள், பொதுப் பணித்துறை தொழில்நுட்ப செயற்பொறியாளர் தமிழரசன், உதவி செயற்பொறியாளர் திருவருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்