Tuesday, February 09, 2010 9:20 PM IST
Click
தலையங்கம்
தலையங்கம்:துணை முதல்வருக்கு வாழ்த்துகள்

First Published : 30 May 2009 01:29:00 AM IST

Last Updated : 30 May 2009 03:22:10 AM IST

எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது. 1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை. இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.

1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.

ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.

கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.

கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.

அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?

மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.

மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.

முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.

இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

  தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. "தினமணி'யின் வாழ்த்துகள்.
கருத்துக்கள்

My Beste wishes to E N G A L T H A L A B A T H I Y A R M K S

By Shaik Ali ,TORONTO
6/29/2009 9:49:00 AM

all the best .

By mohan.s.n
6/23/2009 12:33:00 PM

MR.STALIN ARASIYALUKKU VANTHATHU AVARATHU THANTHAIYIN VIRUPPAPADI ILLAI ENBATHAIYUM AVAR ENTHA NIRBANTHA CHOOLALIL ARASAIYALIL NUZHANTHAR ENBATHAIYUM THERINTHAVARGAL KUDUMBA ARASIYAL ENRU PESAMATTARGAL. KALAIGHAR ITHUVARAI M.K.STALINUKKU URIYA PATHAVIYAI URIYA NERATHIL THARAMAL IRUNTHATHARKKU 'KUDUMBA ARASIYAL' ENRA VIMARSANATHAI THAVIRPPATHARKKAGA IRUNTHIRUKKALAM. VAZHGA STALIN. VAZHARGA AVARATHU THONDU.

By KUTTY
6/20/2009 10:49:00 AM

வணக்கம் ஆசிரியரே! தங்களின் சீரிய தலையங்ககம் கண்டேன்! கூசாமல் பேசும் பொய்யனை போலே தாங்கள் எழுதி எங்களுக்கு எல்லாம் மனத்தாங்கல் தந்தது ஏனோ?தினமணி என்ன முரசொலியின் நகலொளியா? கருணாநிதியின் மைந்தன் துணை முதல்வர். #1ஏன்? #2 எப்படி? #3எதற்கு? #1.கட்சி குடும்ப சொத்து ஆனபின்னே ஆட்சியும் அப்படித்தானே என் பதிலுக்கு வினவினால் பதில் இல்லை. #2.மக்கள் வாக்கு அளித்து தானே பதவி பெறவேண்டும் என நெறிமுறைப்பற்றி சிந்திக்கும்போது...இப்போதெல்லாம் முறைப்படியா தேர்தல் நடை பெறுகிறது என பதிலுக்கு வினவினால் பதில் இல்லை. #3.இதற்கு முன்னே பதவி வகித்த மேயர் பதவிக்கான தேர்தல் முழக்கம் "சிங்கார சென்னை" என்னவாயிற்று என சிந்திக்கும் போது...இப்படி முழக்கங்களால் தமக்கு பதவியும் மக்களுக்கு மறதியும் கொடுப்பதே போதாதா 5முறை பதவிக்கு வந்தவரின் வாரிசுக்கான சான்றிதழ் என பதிலுக்கு வினவினால் பதில் இல்லை.

By UVAN
6/19/2009 3:25:00 PM

STALIN IS TOO MUCH SELFISH LIKE HIS FATHER. HIS FATHER WILL NEVER BECOME GOOD CHIEF MINISTER NAME EVEN IF HE RULE MORE YEARS. ONLY AZAKHIRI BECOME GOOD NAME BECAUSE HE IS HAVING GOOD THINGS TO DO EXCEPT PREVOIUSLY ROWDY. BY AZHAKIRI VISUVASI

By anbu
6/19/2009 2:53:00 PM

Why no Perasiriar Anbalaghan? Is DMK only for Karunanidhi family?

By sunil
6/16/2009 9:44:00 AM

தரக்குறைவான விமர்சனங்கள் செய்யமாட்டார் ,தரமான அரசியல் செய்பவர் , முன்னாள் முதல்வர் ஜெயாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர்,மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட பதவி என்பது முற்றிலும் உண்மையாகும் இனியாவது கருணாநிதி ஸ்டாலினை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் அவரின் முழு நிர்வாக திறமையும் வெளி வரும்

By raja
6/6/2009 5:37:00 PM

TO : HON'BLE SHRI. M.K. STALIN, DY CM-TN, CHENNAI HON'BLE SHRI. M.K. STALIN-JI, NAMASTE. HEARTY, GREETINGS FOR OUR HON'BLE KALAIGNAR'S 86-th BIRTH DAY. I PRAY GOD FOR HIM TO GIVE LONG AND PEACEFUL LIFE. I WOULD LIKE TO GIVE A SUGGESTION FOR YOU IN HIS BIRTH DAY (03.06.09), KINDLY GIVE 30-35 % OF EMPLOYMENT-(CLERICAL STAFFS/OFFICE ASSTS/HELPERS-etc) FOR LADIES IN OUR STATE LIKE TNEB, TNHB, POLICE DEPT AND OTHER RELATED DEPARTMENTS. PLEASE, INCREASE THE STRENGTH OF WOMEN EMPLOYMENT BY TAKING BOTH UNEMPLOYED GRADUATES AND ITI PASSED CANDIDATES. SO THAT THOSE LADIES LIFE WILL GET BRIGHTNESS, PEACEFUL AND HAPPINESS. I HOPE THAT YOU WILL DO WELL IN YOUR NEW ASSIGNMENT, CONGRATS AND CONVEY MY BEST WISHES. WITH WARM REGARDS FOR ALL OF YOU. THANKING YOU. BY : K.A.N. ANCHI, SENIOR MANAGER'(PPC), SAIL/VISL-BHADRAVATHI. (BHADRAVATHI TAMIL SANGAM, KARNATAKA STATE)

By K.A.N. ANCHI
6/5/2009 8:08:00 AM

Dont waste time on telling family politics blblaaaaa. Shut your mouth and speak good words for the forthcoming of deputy CM. And where is the dutiful opposition leader who was supposed to help the ruling party in the progress of the state? She is once more climbed the tree and gone for rest. what irresponsive, careless,indisciplined oppostion leader you tamils has choosen? shame on you and not on her.

By sudar
6/4/2009 11:30:00 AM

Dr.Kalaignar acted like a Teacher and Trainer to his own son. In his place, any body else would have thrushed his/her son into positions. I agree it is not the best model to put family members into positions. But who else will have an appeal to populace after M.K? He in earlier years thought about Vaiko, but Vaiko on the trial ground erred and aligned with other parties. To do business with M.K. the first condition is loyalty. Nobody else had that, except Mr.M.K.Stalin. Congrats Mr. M.K.Stalin, best wishes for achieving great things for TN

By Raj Subramkanian
6/3/2009 3:59:00 PM

best wishes for new dy cm mr.stalin in future your your hand do your best and prove it

By samy singapore
6/3/2009 7:07:00 AM

stalin may be a good administrator. ofcourse he is a good man with vison, but in the current political situations, he cannot be good politician. so he can be CM / Dy CM, but the DMK party should be lead by Alagiri only. cos,he has the same guts and tactics of MK, THIS IS GOOD FOR DMK PARTY TO STAND FORTH. OTHERSIE THE PARTY WILL LOOSE CONTROL.

By VALLUAN
6/2/2009 11:37:00 AM

Readers should know the fact that not just MK alone did it? Family dynasty in politics is nothing new. Motila Nehru, Jaharlal Nehru, Feros Gandhi, Indira Gandhi, Sanjay, Rajive, Sonia, Rahul and Priyanka are of a single family. Charan Singh and his son Ajith Singh, Devilal and his son Om Prakash Choutala, Shek abdullah, Farook abdulla and his son Omar Abdullah, Deve Gouda and his sons, Revanna, Kumarasamy & His wife, Vijaya Raje Sindia, Madhav Rao Sindia, Vasundara Raje Sindia, Jothir Aditya Sindia, Jag Jivan Ram and his daugter Mira Kumar, Biju Patnaik and his son Navin Patnaik, Lalu Prasad and his wife Rabri Devi, S. B Chavan and his son Ashok Chavan, lal Bahadur Sasthri & Sunil Sasthri, Jithendra Prasad and his son, NTR and his wife Siva Parvathi, daughter Purandeswari, Son-in-law Chandrababu Naidu, Karunakaran and his son Muralidharan and daughter Padmaja, Bangarappa and his son Kumar Bangarappa, Yediyurappa and his son Raghavendra, Gundu Rao and his son, Rajesh pilot and Sachin Pi

By Chola
6/2/2009 5:43:00 AM

DMK Stands for T(D)irukuvalai M.Karnanidh & CO.. Now Depty CM is MKStlain.. Nothing is great, will wait and see how long he can servey??

By Sabari, USA
6/1/2009 10:30:00 PM

MR. ANNA DURAI HAS CREATE A PARTY, NOW IT OWN BY M. KARUNANITHI OWN FAMILY MEMBER

By JOHNSON
6/1/2009 3:16:00 PM

Drivarna Avvlavu kevalama, en DRIVER MLA aga koodathu. Ever Ootu pottrupira enbathu santhegame.

By Marudu
6/1/2009 3:12:00 PM

people have more confidence with mr stalin

By parvathi
6/1/2009 2:00:00 PM

I heared that the Karunanidhi car driver is going to get MLA seat in next election. Is it true? PONGADA NEENGALLUM UNGA ARASIYALUM......................................................

By sunil
6/1/2009 9:51:00 AM

மீடியாக்களில் பார்க்கும்பொழுது அவரின் முகத்தில் மகிழ்ச்சி, அப்பா இப்பவாது கிடைத்ததே என்று ஆனந்த புன்னகை!வாழ்த்துக்கள் ஸ்டாலின்,நற்பெயர் எடுத்து நன்கு சாதித்து காட்டுங்கள்

By Akbar Ali HR Dubai
5/31/2009 4:07:00 PM

nothing is wrong stalin deserve to get for the same, he is very simple and can be good admistrator in future good luck

By venkat
5/31/2009 4:00:00 PM

Congrats Mr. Stalin, we hope that you will be different in all aspects to march tamil nadu in progressive way, Best regards.

By M.Paul
5/31/2009 3:14:00 PM

மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். குடும்ப, ஜாதிய, குண்டர் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு, நல்லதொரு ஆட்சியாளராக தொண்டாற்றுவார் என நம்புவோம்.

By BAALAA
5/31/2009 1:20:00 PM

Very very late but good move. He will be better than Jayalalitha.Please don't follow your father's view in many issues. Just prove that you are different from your father and others and friend to even Jayalalitha

By Radhakrishnan
5/31/2009 10:10:00 AM

NEW DEPUTY CM READ THIS ACT NOW AS TAMIL PERSON SINHALAVAN WILL RAPE TN MOTHERS OR WIFES OR DAUTHERS HELP BY CHINA AND PARKISTAN. I'M 100% SURE CENTAL GOVENMENT NOTHING GOING TO DO FOR PROTECT TAMIL NADU PEOPLE. HINDI GOVERNMENT DID NOT TALK OR CONDEMN OR WARN TO SRI LANKAN NAVY KILLING TAMIL NADU FISHERMENS. BUT CENTAL GOVENMENT GAVE ARMS AND TRAINING TO SRI LANKAN NAVY. EVEN NOW ANY MEADIA THINK ABOUT TN FISHERMEN FUTURE. NOW NO MORE LTTE SO THEY WILL COME AND ATTACK WITHOUT ANY DIFFICALTY. IF PEOPLE GETTING ANGRY IMMEDIATLY SONIA GAVE SOME MONEY FOR KARUNANIDHI THEN TN GOVERNMENT START DRAMA BECAUSE TN CHEIF MINISTER IS A GREAT WRITER. TN MEDIA ALSO GETTING MONEY FROM BOTH GOVERNMET AND THEY WILL HIDE THOSE ATTACK.

By X-RAY
5/31/2009 4:57:00 AM

ALL THE BEST "THALABATHI" MR.STALIN

By Hajamohaideen
5/31/2009 2:10:00 AM

CONGRATS STALIN, PLEASE DO SOMETHING FOR DIEING EELAM TAMILS ... WE ARE FED UP OF POENS/LETTERS/TELEFON CALLS/TELEGRAMS FROM MK..

By VENKAT
5/31/2009 1:56:00 AM

My Hearty Congratulations to Mr. M.K. Stalin, I wish you to be a Successful in all your decision and move in life. God Bless You. By Venkatakrishnan.N. Adambakkam, Chennai.

By Venkatakrishnan.N
5/31/2009 12:24:00 AM

கனிமொழியையும் கண்டுக்கத் தலைவா.துரை தயாநிதி,கலாநிதி மாறன்,மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் குடுங்க தல.

By raja
5/30/2009 11:52:00 PM

Mr. Stalin has not done any thing great for Tamil Nadu sofar, which may be perhaps because his hand were tied by a rope named "M.K.". But, if that was the reason, now the rope is released. God has given him a good opportunity to serve the people. So, let us wish him all success and wait and watch how he performs.

By siva
5/30/2009 11:38:00 PM

Dear EDITOR, ACCORDING TO YOU IT IS TOO LATE.IS IT ENOUGH OR DO YOU WANT TO SAY ANYTHING ?????DUE YOU KNOW WHEN D.M.K EATABKISHED BY MR.ANNADURAI WHO ALL ARE PARTOCIPATED IN THE FUNCTION AND HOW MAY PARTY CADERS SPENT THEIR VALUABLE TIME , LIFE AND SOUL TO D.M.K. IS ANY ONE OF THE THOSE PARTY PEOPLE GOT ANY BENIFIT FROM THIS D.M.K.EVEV ANNADURAI SON ATTEND SUICIDE DUE POVERTY /ILLNESS WHO ELDER THAN KARUNANIDHI. STALIN HAS THE ONLY CHANCE/ RIGHT TO BECOME DEPUTY CM BECAUSE HE IS SON OF KARINANITHI THERE IS NO REASON HE IS TO BECOME DY CM. IN 1990 REF THE NEWS PAPER SOPANARAVI MATTER WILL VISIBLE TO YOU. IN D.M.K OMLY THE SENIOR CITIZEN LEADS THE YOUTH WING. THIS THE FACT OF TANILNADU.EVERYBODY KNOWS WELL THAT D..M.K IS ONLY FOR KARUNANITHI FAMILY THEN I DIN"T KNOW THE PEOPLES VOTING AND SELECTING THEM AND EVEN WORKING FOR DMK. IS IN INDIA KINGDOM RULE OR DEMACRACY RULE.

By A.Kandappan
5/30/2009 10:25:00 PM

Dear Stalin Congrats. Lot of challanges infront of you. But this is the right time to prove yourself as a Dynamic leader for Tamilnadu. My personal suggestion is please concentrate the village people for their basic needs like water, road and electricity facilites to be availed soon. You have 234 MLAs. U can do anything for the poor people. Pls try to stop all free TV, Cylinder. Pls do not follow your father in this regard. Bcoz Free to the people can get votes to your party but will taper the financial position the state, which will be dangerous. Anyhow i am happy to say congrats for a Dynamic youg leader for our state. RAVI SRINIVAS R

By RAVI SRINIVAS R
5/30/2009 9:01:00 PM

Stalin is a great politician. He fully deserve for CM of TN. He is 100times atleast betterthan Jayalalitha. Very Best of Luck. Many Thanks for dinamani publish this wonderful article. Interesting and Impressive. Well done for the author.

By Tamilarasan
5/30/2009 8:55:00 PM

Dinamaniyin JAALARA saththam Yappa... Kathu kiliyidu pongo...

By Varagunan
5/30/2009 8:07:00 PM

தரக்குறைவான விமர்சனங்கள் செய்யமாட்டார் ,தரமான அரசியல் செய்பவர் , முன்னாள் முதல்வர் ஜெயாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர்,மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட பதவி என்பது முற்றிலும் உண்மையாகும் இனியாவது கருணாநிதி ஸ்டாலினை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் அவரின் முழு நிர்வாக திறமையும் வெளி வரும்

By தமிழருசு
5/30/2009 7:55:00 PM

பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் எங்கள் கல்லூரி தேர்தலுக்காக ஸ்டாலினிடம், மாணவர்கள் நாங்கள் எங்கள் தரப்பு மாணவர் வெற்றி பெற ஆதரவு கேட்டு சென்றோம். அப்போது அவர் சொன்ன பதில் "தயவு செய்து கல்லூரி தேர்தலில் அரசியலை கலக்க வேண்டாம் இதில் நான் தலையிட மாட்டேன் , வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்" பந்தா இல்லாத தலைவர் ,இவர் புரட்சி புயல் அல்ல இனிய தென்றல், தந்தையை போல் சிறந்த அரசியல் ராஜதந்திரி அல்ல ஆனால் மிகச்சிறந்த மனிதாபிமானி , இவரை போல் நல்ல மனிதர் தான் தமிழகத்தை ஆள வேண்டும் ராஜதந்திர அரசியல்வாதிகள் தேவையில்லை.

By பாஸ்கரன்
5/30/2009 7:42:00 PM

எப்படியோ திட்டமிட்டுப் படிப்படியாகக் காய்களை நகர்த்தி அழகிரி மத்திய அமைச்சுத் துறையின் பொறுப்பை ஏற்கும் முன் தமிழகத்தின் முதல் துணை முதல்வராக ஆகிவிட்டார். நாமும வாழ்த்துவோம். இனிக் குடும்பச் சிக்கல் குறித்துக் கலைஞர் முழுமையாகப் பார்த்துக் கொள்வார். கனிமொழியின் சினம், இராசாத்தி அம்மாள் மனத் தாங்கல் போன்றவற்றில் அவரது கவனம் முழுவதுமாகப் போகப் போவதால் ஆட்சியின் முழுப் பொறுப்பபைத் தாங்களே ஏற்க வேண்டும்! ஏதோ துணை முதலவர்தானே என்று எண்ணாமல் முழுமையாகத் தமிழ் நாட்டின் நலனையும் உலகத்தமிழர் நலனையும் கருத்தில் கொள்ள் வேண்டும்! கலைஞரின் இன உணர்வுப் படைப்புகளைப் படித்து வீறு கொள்ள வேண்டும். மத்திய அரசின் கொள்கையை உலகத் தமிழர் நலன் பக்கம் திருப்ப வேண்டும்! முதற் கட்டமாக ஈழததமிழர் நலன காக்கக் குரல் கொடுத்துத் தமிழ் ஈழத்தை மலரச் செய்ய வேண்டும்! உங்கள் பணி சிறக்க! தமிழ்நாடு வளமுறுக! தமிழ் எங்கும் பரவுக! உலகத் தமிழர் நலன் பேணுக! தமிழ் ஈழம் தமிழ் ஈழம் மலர்க! நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் அனைத்தையும ஆற்றுக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/30/2009 7:36:00 PM

தனக்கு அடுத்துப் பேராசரியர் முதலான யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக உரிய பாதையைத் தன் மகனுக்கு உருவாக்கிக் தந்தை தன் கடமையைச் செய்துள்ளார். முதல்வர் தனக்குரிய விருப்புரிமையைப் பயன்படுத்தித் தன் மகனைத் துணை முதல்வர் ஆக ஆக்கி இரு மக்களிடையே சமநிலையை ஏற்படுத்திக் குடும்பக் குழப்பத்தைத் தீர்த்திருக்கிறார்.ஆனால் இது குறித்துக் கவலைப்பட வேண்டியது வாயில்லாப் பூச்சிகளான கட்சியினர்தான். எனவே மனமிருந்தால் வாழ்த்துங்கள். இல்லாவிட்டால் ‌தேர்தலில் வீழ்த்துங்கள்! நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கும் மாண்புமிகு துணை முதல்வருக்குத் தமிழ்,தமிழர் நலனுக்காகச் செயல்பட வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/30/2009 7:32:00 PM

absolutely a shameful act. Next move of CM is to make his sons Tamil Arasu as Governor of Andhra / kerala / and Muthu as Ambassodrs to USA. And then his consort as the next president. Indira Gandhi did not have any post till her father died. none of the children of Patel/ Dr. Prasad who shed their blood for freedom had any post of power. shame on Tamil people who tolerate this and curse be upon TN for ever.

By babu
5/30/2009 7:29:00 PM

Excellent decision taken by Mr.Karunanidhi. Only request to Mr.Stalin is to uphold the decency of Political tradition followed by our great leaders like Pandit Nehru, Sastri etc. They all respected the opposition leaders. Please do not personalize politics. Opposition leaders should also be taken into confidence. Mr.Stalin should change the poor tradition in TN politics of personalizing politics. Mr.Stalin must try to ease the tension between the government and AIDMK leader for the better smooth governance. He should set an example to other leaders in this move. I wish all Godspeed to this great young turk.

By R.C.Mohan
5/30/2009 6:39:00 PM

It is clear now that Mu. Ka was waiting for a cabinet berth for Azhagiri. If Stalin elevated to (Dy)Chief Minister Chair in the absence of cabinet berth for Azhagiri,may be bright chances for infighting in family. This cannot be ruled out. Several interviews of Mu. Ka. Muthu reveals this. No one objects Stalin becoming CM ( already expected) but the timing only raises eyebrows!fami

By s
5/30/2009 6:32:00 PM

Best of Luck to Stalin. Dynastic politics is everywhere in the world. There is no point in crying - as if this is unique in Tamilnadu. Stalin is elected appropriately by party election. If other members in the DMK party doesn't have guts to contest for the post- then the critics need to shutup.

By Bob
5/30/2009 6:27:00 PM

Stalin definitely deserves this elevation. He has proved his administrative acumen and conducts himself in exemplary manner. He is reported to have given a free hand to honest officials and gives a patient hearing to their sincere advice. Let us extend a warm welcome to the Deputy CM with the expectation that he would continue to do his best to the people of Tamil Nadu. V Balasubramanian, Porayar

By V Balasubramanian
5/30/2009 6:18:00 PM

Recently one e mail is seen where most of print/elec.media controlled by Xians including New IE group and you are of no exception. When genocide takes place at doorstep, without any regard, enjoy with pomp and show and fourth estate wishing. What is the difference between Monarch and Dynasty rule. The Time has brought ethnic genocide that too at a time 20,000 innocent lives buried in a pit. You can't enlight but wishing for your survival. History will have black mark but this has no meaning for butchers and supporters like you.

By V Gopalan
5/30/2009 6:17:00 PM

valtthukkal varungala muthalvare,best wishes

By skm hanifa alagai
5/30/2009 6:00:00 PM

தலைவரே நமக்கு ஒரு சீட்டு போதும் நைசாக அந்த பிரதமர் சீட்டை மகனுக்கு கேட்டு பாருங்கலேன்.. அப்படியே பிரதீபா அம்மாவுக்கு ‌பிறகு அந்த ஜணாதிபதி சீட்டை மகளுக்கு வேணும்ணூ ஒரு பிட்ட போட்டு வைங்க!! உங்களுக்கும் ஒபாமாகிட்ட சொல்லி அந்த பாகிமூணுக்கு அப்புறம் ஐ.நா சபை தலைவர் சீட்டை கேட்டு பார்ப்போம்..நம்ப மன்மோகன் அய்யாகிட்ட சொன்னா போதும், ஒபாமா ALL INDIANS ARE LOVE YOU ணூ ஐஸ் வைச்சி கண்டிப்பாக உங்களை ஐ.நா தலைவர் ஆக்கி விடுவார்.தமிழகத்தை சின்ன மகனிடம் கொடுத்து விடலாம்..அப்புறம் என்ன கவலை உலகமே நம் குடும்பத்தினர் கைக்குள் வந்துவிடும்.. உலகத்தை நோக்கி எனது உயிரிநும் மேலான அன்பு உட‌ன் பிறப்புகலெ.. அமெரிக்காவில் கிலோ அரிசி ஒரு ரூபாய், இலவச கலர் டி.வி,ரூபா‌ய் 50க்கு 10 பொருள், இப்படி இலவசந்கலை அள்ளிவிட்டால், அமெரிக்காவிலும் நம் கழக(குடும்ப) ஆட்சியை அமைத்து விடலாம்..." எனது உயிரிநும் மேலான அமெரிக்க அன்பு உட‌ன் பிறப்புகலே என்னை கடலில் தூக்கி எரிந்தாலும் நா‌ன் கட்டு மரமாக மிதப்பெந் எந் மீது ஏறி ‌நீ‌ங்க‌ள் கரை சேரலாம் இதுபோல உங்கள் வசனங்களால் பின்னி பெடலெடுத்தால் சாத்தியமாக அமெரிக்காவில் அடுத்து அமைவது நம்

By GB.RIZWAN
5/30/2009 5:56:00 PM

தான் மேயராக இருந்த காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர் தரத்தை உயர்த்தியவர் மு.க. ஸ்டாலின். ஆரவாரம் இல்லாமல் அற்புதம் நிகழ்த்துபவர்கள் இவர் போல வெகுசிலரே! முதல் முறையாக State-supported முன்பருவக் கல்வியை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகம் செய்தவர். இதுபோன்ற ஒரு முன்மாதிரி இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை. தரமான கல்விக்க்கு தரமான முன்பருவக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துவோர் பலர் இருந்தாலும் அதற்கு அதிகாரபூர்வமாக செயல் வடிவம் தந்தவர் இவர் ஒருவரே! ஆசிய அளவிலும் இது சிறந்த உதாரணமாகப் போற்றப்படுகிறது! பாமரர்கள் கல்வி நலம் போற்றும்ம் நற்பணிகள் தொடர துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!

By Bhuvana
5/30/2009 5:49:00 PM

My hearty greetings Mr. M.K. Stalin !! Thangal Menmelum Uyara en manamaarndha vaalthukkal.

By Janakiraman, Chennai
5/30/2009 5:30:00 PM

I like this move by M>K> and one thing we have to remember.M.K. had made a big dynasty not only in politics but also financially. his family has money worth billions include SUN TV. AND KALAIGNAR TV. My humble request to MKS. is to lead the state to high standards and not his family welfare. Best wishes to stalin.

By sri
5/30/2009 5:18:00 PM

Dear Editor I appreciate ur neutral Heading. People like Siva and Anonymous ones who blame Mr. Stalin and MK are certainly Frustrated Sri Lankans. As far as our state politics; it is a wise but late good decision. Mr. Stalin is an abled man. He will win. Ur comment is correct. Greetings Mr. Stalin!!!

By Arasu
5/30/2009 4:51:00 PM

dEAR SIR,vERY LATE decision.If this is happened one year back atleast 2Lakh people might be living at SL.Any how All the best

By Rangiem N Annamalai
5/30/2009 4:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்