லஷ்கர் தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்
First Published : 30 Jul 2010 05:50:39 AM IST
Last Updated :
தில்லியில் வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். உடன் (இடது) பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.
புது தில்லி, ஜூலை 29: பாகிஸ்தானில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கு இடம் அளிக்கக்கூடாது; அவர்களை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.÷தில்லி வந்துள்ள கேமரூன் பிரதமர் மன்மோகன் சிங்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கேமரூன் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்காமல் அவர்களை பூண்டோடு அழிக்க வேண்டும். இதனால் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் தடுக்கப்படும். அதேபோல் பாகிஸ்தானில் இருந்துகொண்டு மேற்கு எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் மட்டும் வரவில்லை. மும்பையிலும், லண்டனிலும், ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆதரவுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளைக் கண்டறிந்து அவர்களை களைய பாகிஸ்தான் அரசு உடனடிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். பாகிஸ்தான் தற்போதைக்கு எடுத்துள்ள நடவடிக்கை போதாது. அவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும். இப்பிரச்னையில் பாகிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்ய பிரிட்டன் தயாராக உள்ளது என்றார் கேமரூன்.குரேஷிக்கு கண்டனம்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பாகிஸ்தான் பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார்.÷இரு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் குரேஷி இவ்வாறு பேசியிருக்கக்கூடாது. அதைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில் மீண்டும் தொடங்கும் என்றாô பிரதமர்.