பேல்பூரி
First Published : 18 Jul 2010 04:46:22 PM IST
Last Updated :
இம்போர்டட் சரக்குசமையலறையிலிருந்த ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்-க்ரீமை எடுப்பதற்கு முயன்று கொண்டிருந்த தன் மகனை கண்டித்தாள் அவனுடைய அம்மா."இன்னும் கொஞ்ச நேரத்தில டின்னர் ரெடியாகிடும் கண்ணா, ஐஸ் க்ரீமை எடுக்காதே, வெளியே போய் விளையாடு..'' என்றாள்."யாரோடம்மா நான் விளையாடறது..?'' என்றான் மகன்."சரி, நான் விளையாட வர்றேன்...'' என்றாள்.சிறிது நேரத்தில் அவளின் மகன் தலையில் அவனுடைய அப்பாவைப் போன்றே தொப்பியை அணிந்துகொண்டு சமையலறையில் நுழைந்தபடி, அவன் அம்மாவைப் பார்த்து, "ஏய் பெண்ணே... பையனுக்கு உடனே எழுந்து போய் ஐஸ்-க்ரீம் கொடு...'' என்றான்.அபி செல்மொழிசிங்கத்தை போட்டோல பார்த்திருப்ப, சினிமால பார்த்திருப்ப, டிவில பார்த்திருப்ப, ஏன்.. கூண்டுல இருக்கிறதக் கூட பார்த்திருப்ப, ஆனா, எஸ்.எம்.எஸ்.அனுப்பி பார்த்திருக்கியா..? வேகமா டைப் அடிச்சா ஒன்ற டன் எஸ்.எம்.எஸ்.டா பார்க்கிறயா..?சின்னமனூர் எஸ்.ராஜமழை.ஸôரி, கொஞ்சம் ஓவர்!"ஏங்க... தராசுக்கு மேலே நமீதா போட்டோவை பெரிசா வைச்சிருக்கீங்க...?''"வர்றவங்கெல்லாம் தராசையே பார்க்கிறாங்களே.. அதுக்குத்தான்..!''பி.கோகுல், அண்ணாமலை நகர்.படித்ததில் பிடித்தது!"எல்லாம் அவன் பாத்துக்குவான்' எப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையான வார்த்தை? இந்த நம்பிக்கையே எல்லா வேலையையும் வெற்றிகரமாய் முடிக்கும் சக்தியை நமக்கு தருகிறதல்லவா? நம்மை இயக்கும் சக்தியாக நம் வாழ்க்கையின் மேம்பாட்டை பார்த்துக்கொள்ளும் சக்தியாக மாபெரும் சக்தி நம்பினால் இருக்கிறது என்ற நம்பிக்கையே நமக்கு வெற்றியை ஈட்டித் தருமல்லவா? இதுதான் மனிதனை பெüதிக விசையாய் மாற்றும் உளவியல்!சிற்றூர்கள், பெரிய ஊர்கள் என்று விரிந்து வருகின்ற போதே, பல ஒட்டுமொத்த குலங்களுக்கான தெய்வங்கள் இருந்த போதே, தொழிலின் மூலம் சாதியாய் பிரிந்து வாழ்ந்தவர்களிலும், அவரவர்களுடைய சமூக நாயகர்களும் குல தெய்வங்களாகி இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள். பல பெண்களும் குல தெய்வங்களாக இருக்கிறார்கள்!- ஜீயென்பி எழுதிய "கடவுள் ஓர் மார்க்சீய பார்வை' நூலிலிருந்து, வெளியீடு: பூங்குயில் பதிப்பகம்,100, கோட்டைத் தெரு, வந்தவாசி- 604 408.மைக்ரோ கதைஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான். தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து, "உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன். உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?'' என்றான்."நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..''என்றது கிளி.ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான். அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது.திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது. அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்.சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது, "என் ஜோடி கிளியும் சாகவில்லை. நான் தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச் சொல்லி அனுப்பியது. அவ்வளவுதான் நண்பா, வரட்டுமா!'' என்று கூறிச் சென்றது.அ. யாழினி பர்வதம்,சென்னை.சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ்!செருப்பு இல்லாமல் நீ நடக்கலாம். ஆனால் நீ இல்லாமல் செருப்பு நடக்காது.எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.கேட்டதுஒரு வீட்டின் முகப்பில் கணவன் மனைவிக்கிடையே நடந்த உரையாடல்:" ஏன்டி.. என்னை ஞாபக மறதி.. ஞாபக மறதின்னு திட்டுவியே.. இன்னைக்குப் பாரு... போட்டுட்டுப் போன செருப்பை கரெக்ட்டா திரும்ப போட்டுட்டு வந்திட்டேன்...''"கர்மம்... கர்மம்... நல்லாப் பாருங்க... லேடீஸ் செருப்பை போட்டுட்டு வந்திருக்கீங்க..!''-ஜி.பி.செல்வராஜ், பவானி.பரிசு ரூ.100கண்டதுமளிகைக் கடை சுவரில்...நல்லவர்கள் நோட்டீஸ் ஒட்ட மாட்டார்கள்!க.விஜயராகவன், அரியலூர்.பரிசு ரூ.100